பால் பாஸந்தி

  தேவையான பொருட்கள் 
  1. பால் - 1  லிட்டர்
  2. சக்கரை - 1 /2 கிலோ
  3. குங்குமப்பூ - சிறிதளவு
  4. பாதாம் பருப்பு - 10
  5. முந்திரி பருப்பு - 10
  6. உப்பு - 1 சிட்டிகை 
   செய்முறை 
  • பாலை நன்றாக சுண்ட காய்ச்சவும். ஒரு லிட்டர் பாலை அரை லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும்.
  • பிறகு அதில் சக்கரை  சேர்த்து கிளறி இறக்கவும்.
  • பின்  குங்குமப்பூ , முந்திரி,    பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி  மேலே தூவவும்.
  • பிறகு பால் ஆறிய பிறகு பிரிட்ஜில் அரை மணிநேரம் குளிர வைத்து பிறகு பரிமாறவும் .
  Related Posts with Thumbnails