ரவா இட்லி

Cooking recipe for Rava Idly
தேவையான பொருட்கள் 
 1. ரவை - 1 கப் 
 2. தயிர் - 1 கப் 
 3. கடுகு - கால் தேக்கரண்டி
 4. உளுத்தம்பருப்பு - அரைத் தேக்கரண்டி
 5. கடலை பருப்பு - கால் தேக்கரண்டி
 6. கொத்தமல்லி - சிறுது 
 7. மிளகு -அரைத் தேக்கரண்டி
 8. சிரகம்- அரைத் தேக்கரண்டி
 9. எண்ணெய் - சிறிது
 10. உப்பு -தேவையான அளவு
 11. புளித்த இட்லி மாவு - 2 டம்ளர்
செய்முறை 
 • வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்த பின்பு உளுத்தம்பருப்பு கடலைபருப்பு மிளகு சிரகம்  போட்டு சிவந்ததும் ரவையையும் சேர்த்து நன்கு சிவக்க வறுக்க வேண்டும்.
 • வறுத்த பிறகு கீழே இறக்கும்போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.
 • பிறகு  புளித்த இட்லி மாவைக்கலந்து அதனுடன் தயிரையும்  உப்பு சேர்த்து  கலந்து மூடி வைத்துவிடவும்.
 • அரைமணி நேரம் கழித்து இட்லி தட்டில் ஊற்றி வைத்து எடுக்கவேண்டும்.
Related Posts with Thumbnails