ரியல் குலோப் ஜாமூன்

தேவையான பொருட்கள் 
 1. ஸ்வீட் லெஸ் கோவா - 1/2கிலோ
 2. சமையல் சோடா - 2 சிட்டிகை
 3. மைதா - 1/4 கிலோ
 4. சர்க்கரை - 3/4 கிலோ
 5. ஏலக்காய் பொடி-3 சிட்டிகை
 6. எண்ணெய் அல்லது நெய் - பொரிப்பதற்கு
       செய்முறை 
       • ஒரு  பாத்திரத்தில் மைதா,கோவாவை போட்டு   சமையல் சோடா சேர்த்து  பிசையவும்.
       • கோவா மிருது தன்மை கிடைக்கும் வரை பிசையவும்.
       • இதனை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
       • சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
       • சர்க்கரையில் 2கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
       • பின் சர்க்கரைபாகுல்  ஏலக்காய் பொடி சேர்க்கவும் 
       • சிறு தீயில் எண்ணெய் அல்லது நெய்யில் ஜாமூன்களை பொரித்து சூடான பாகில் போடவும்.நன்கு ஊறிய பிறகு பறிமாறவும்.
       • சுவையான குலோப்ஜாமூன் தயார்
       Related Posts with Thumbnails