ப்ரெட் சாண்ட்விச்


Tamil Cooking recipe for Bread Sandwich

தேவையான பொருட்கள்
 1. ப்ரெட்- 10 
 2.  வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கி கொள்ளவும் )
 3. தக்காளி- 1 /2
 4. துருவிய  கேரட் - 1 
 5. முட்டைகோஸ் - 1 /2 கப் (நீளமாக நறுக்கி கொள்ளவும் )
 6. கரம் மசாலா - 1 சிட்டிகை
 7. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
 8. மிளகாய் தூள் - 1  மேஜை கரண்டி
 9. எண்ணெய் - 2 மேஜை கரண்டி 
 10. உப்பு -1 சிட்டிகை
 11. கொத்தமல்லி தழை 
செய்முறை 
 • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
 • பின் தக்காளி,,, ,     துருவிய கேரட் முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும் 
 • அதன் பின்  கரம்மசாலா  மஞ்சள்தூள்  மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்
 • கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும் 
 • இப்பொழுது ப்ரெட்டின் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெயை தடவி தோசை கல்லில் போட்டு ரோஸ்ட் பண்ணவும்.
 • அதன் பிறகு ரோஸ்ட் செய்த ப்ரெட்டின் உள் ஃபில்லிங்கை வைத்து சூடாக பரிமாறவும்
Related Posts with Thumbnails