பொரி உருண்டை

தேவையான பொருட்கள் 
    1. பொரி - 4 கப்
    2. வெல்லம் - 250 கிராம்
    செய்முறை 
    • ஒரு பாத்திரத்தில்  வெல்லத்தை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கரைய விடவும்.
    • வெல்லம் கரைந்ததும் அதை  வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
    • அடுப்பில் வாணலியை வைத்து அதில் 2 கப் அளவு வடிகட்டிய வெல்ல தண்ணீரை ஊற்றி கம்பி பதம் வரும் வரை கிளறவும்.
    • பாகு நன்கு நுரைத்து பொங்கி வரும் போது பொரியை கொட்டி பாகுடன் பொரி சேரும்படி நன்கு கிளறி விட்டு இறக்கி வைத்து விடவும்
    •  தட்டில் எண்ணெய் தடவி அதில் இந்த பொரி கலவையை கொட்டி  உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
    •  கையில் ஒட்டாமல் இருப்பதற்கு சிறிது எண்ணெயை கையில் தடவிக் கொள்ளவும்
    Related Posts with Thumbnails