பிரெட் அல்வா


Tamil Cooking recipe for Bread Halwa
தேவையான பொருட்கள்
 1. பிரெட் ஸ்லைசஸ் - 10
 2. சீனி - 1 1/2 கப்
 3. பால் - 1   1/2  கப் 
 4. முந்திரி - 15
 5. உலர்ந்த திராட்சை -10
 6. நெய் - 1 /2 கப்
 7. சிகப்பு கலர் - ஒரு சிட்டிகை
செய்முறை 
 • மில்க் பிரட் அல்லது சால்ட் பிரெட்.பிரெட் ஓரத்தை கட் செய்து வித்து விடவும்    
 • பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி  பொடித்து  கொள்ளவும்.
 • வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும்,    உடைத்த முந்திரிப் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
 • அதே வாணலியில் பொடித்து வைத்துள்ள பிரெட்டை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
 • பிறகு வாணலியில் 1 1/2  கப் பால்  ஊற்றிசக்கரை  போட்டு 3 நிமிடம் கிளறி விட்டு வேக விடவும்.
 • சக்கரை  பாகாக கரைந்து, கொதித்து பொங்கியது போன்று வரும் போது, வறுத்து வைத்துள்ள பிரெட் துகள்களைப் போட்டு நன்கு கிளறி விடவும்.
 • பிரட் துகள்கள் சற்று வெந்தவுடன் அதனுடன் நெய்,   சேர்த்து நன்கு கிளறி விடவும்
 • அல்வா பதம் வரும்போது, வறுத்த முந்திரி, திராட்சை சேரத்து கிளறி விடவும்.
 •  நறுக்கின முந்திரி சேர்த்து  பரிமாறவும்.
Related Posts with Thumbnails