போளி

Cooking Recipe for Phooli
தேவையான பொருட்கள்
  1. மைதா - ஒரு கப்
  2. தேங்காய்ப்பூ - அரை கப்
  3. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  4. உப்பு - கால் தேக்கரண்டி
  5. நெய் - 50 கிராம்
  6. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  7. ஏலக்காய் - 5
  8. வெல்லம் (அ) சர்க்கரை - கால் கப்
செய்முறை
  • மைதாவில் உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் எண்ணெய் சேர்த்து இலகுவாக பிசைந்து ஒரு மணி ஊறவைக்கவும்.
  • ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு தேங்காய்ப்பூ போட்டு வதக்கி, பொடியாக்கிய ஏலக்காய் போட்டு கிளறி இறக்கி தூளாக்கிய வெல்லம் (அ) தூளாக்கிய சர்க்கரை போட்டு பிசறவும்.
  • மாவை எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கட்டையில் வட்டமாக தேய்க்கவும். அதன் நடுவில் தேங்காய்ப்பூ வைத்து சுற்றிலும் மூடி மறுபடியும் தேய்க்கவும்.
  • தோசைக்கல்லில் தேய்த்ததை போட்டு சுற்றிலும் நெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
Related Posts with Thumbnails