இட்லி மஞ்சூரியன்

Cooking recipe for idly manchurian 
தேவையான பொருட்கள் 
 1. இட்லி - 6
 2. தக்காளி கெச்சப் - 1 கப்
 3. ரெட் சில்லி சாஸ் - ௧/4 கப்
 4. பொடியாக நறுக்கின உள்ளி - 1 cup
 5. பொடியாக நறுக்கின வெங்காயத்தாள் - 1 /2 கப் 
 6. சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
 7. சோளமாவு - 1 தேக்கரண்டி
 8. உப்பு - தேவையான அளவு
 9. கொத்தமல்லித்தழை - சிறிது
 10. எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை 
 • இட்லியை நான்கு  துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் வெட்டின  இட்லி துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
 • வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்    அதனுள் பொடியாக நறுக்கின வெங்காயம் பொடியாக நறுக்கின வெங்காயத்தாள் ஏலவற்றையும்  போட்டு வதக்கவும்.
 • சிறிது தண்ணீரில் சோள மாவை கரைத்து வைக்கவும்
 • பின்னர் அதனுள் தக்காளி கெச்சப், ரெட் சில்லி சாஸ் சோயா சாஸ், விட்டு கிளறவும்.
 • அதன் பிறகு சோளமாவு கரைசல்,  உப்பு சேர்த்து கிளறவும்.
 • கலவை கொஞ்சம் கெட்டியானதும்  பொரித்து வைத்த இட்லி துண்டுகளை போட்டு கிளறவும்.
 • இட்லி மஞ்சூரியன் ரெடி .மேலே கொத்தமல்லித் தழை தூவி சூடாக பரிமாறவும்.
Related Posts with Thumbnails