முடக்கத்தான் தோசை

Cooking recipe for Mudakathan Dosai 

தேவையான பொருட்கள் 
  1. ஆய்ந்த முடக்கத்தான் கீரை - 1 கப்
  2. புழுங்கல் அரிசி - 3 கப்
  3. வெந்தயம் - 1 டீஸ்பூன் 
  4. உப்பு - தேவையான அளவு
செய்முறை 
  • புழுங்கல் அரிசியை,வெந்தயம் சேர்த்து  நான்கு மணிநேரம் ஊற வைக்கவும். கீரையை ஆய்ந்து சுத்தமாக  கழுவிக் கொள்ளவும்.
  • ஊற வைத்த அரிசியை மிக்ஸ்யில் அல்லது கிரைண்டரில் அதனுடன் கீரையை போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு அரைத்தால் காலையில் சுடுவதற்கு தயாராக இருக்கும்..
  • தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்த மாவை ஒரு கரண்டி ஊற்றி தேய்த்து மேலே எண்ணெய் ஊற்றவும்.
  • 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
Related Posts with Thumbnails