பூரி மசால்

Tamil Cooking recipe for Poori Masala தேவையான பொருட்கள் 
 1. உருளைக்கிழங்கு - 4
 2. வெங்காயம் - 2 (நீட்டமாக வெட்டவும் )
 3. பச்சை மிளகாய் - 4
 4. மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
 5. கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
 6. கடுகு - 2 டீஸ்பூன்
 7. உளுத்தம் பருப்பு -2 டீஸ்பூன்
 8. இஞ்சி -1 துண்டு 
 9. கறிவேப்பிலை - ஒரு கொத்து
 10. எண்ணெய் -  5 டேபிள் ஸ்பூன்
 11. கொத்தமல்லி - சிறிது 
 12. உப்பு - தேவையான அளவு 
செய்முறை 
 • உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து  வேக வைத்து,  மசித்து வைத்து  கொள்ள வேண்டும்.
 • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பையும் கறிவேப்பிலை போட்டு  பொரிக்க வேண்டும் 
 • பிறகு வெங்காயம்,   சேர்த்து வதக்கி இஞ்சி  பச்சை மிளகாயை இரண்டாக கீறி  போட்டு அத்துடன் மஞ்சள் தூள், உப்பு,     சேர்த்து வதக்கவும்.
 • நன்கு வதங்கியவுடன்  மசித்து  வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு கிண்ட வேண்டும்,
 • கொத்தமல்லி சேர்த்து இறக்கவும் 
Related Posts with Thumbnails