தயிர் சாதம்

Tamil Cooking recipe for Curd Rice
தேவையான அளவு 
  1. அரிசி - 1 கப் 
  2. பால் - 1 கப் 
  3. தயிர் - 1 கப் 
  4. பச்சை மிளகாய் - 2
  5. இஞ்சி - 1 துண்டு
  6. உப்பு - தேவையான அளவு 
  7. கடுகு - 1 தேக்கரண்டி
  8. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  9. பெருங்காய தூள் -1 தேக்கரண்டி
  10. எண்ணெய் - சிறிது
          செய்முறை 
           • குக்கரில் 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரிசி சேர்த்து சற்று குழைவாக வேகவைத்து கொள்ளவும். 
           • பாலை நன்றாகக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
           • சூடான சாதத்தில் பாலை ஊற்றி நன்றாகப் கலந்து கொள்ளவும்
           • அதில் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும் 
           • பிறகு உப்பையும், சேர்த்து கிண்டிகொள்ளவும்
           • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,  உளுத்தம்பருப்பு,  கறிவேப்பிலை,   போட்டுத் தாளித்து இஞ்சி, பச்சைமிளகாய்களை பெருங்காய தூள் போட்டு வறுத்து சாதத்தில் போடவும்.
           • பிறகு கலந்து பரிமாறவும் 

           Related Posts with Thumbnails