இனிப்பு சோமாஸ்

Cooking recipe for Sweet Somasa


தேவையான பொருட்கள் 
பூரணம்:

  1. வறுத்த  வெள்ளை எள் - 2 மேசைக்கரண்டி
  2. துருவிய‌  தேங்காய் - 1/2 முடி 
  3. ச‌ர்க்க‌ரை - 3/4 ட‌ம்ள‌ர்
  4. நெய் - 2 தேக்க‌ர‌ண்டி
  5. முந்திரி,   பாதாம் - 6
மாவு த‌யாரிக்க:
  1. மைதா மாவு - 1/4 கிலோ
  2. ர‌வை - 1 /4 கப் 
  3. சோடா உப்பு -2சிட்டிகை
  4. உப்பு -  2 சிட்டிகை
  5. வெண்ணை  - 2 மேசைக்க‌ர‌ண்டி
செய்முறை:
  • ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொண்டு அதில் ரவை,   சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து  வெண்ணை  உருக்கி ஊற்றி நன்கு பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
  • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம் போட்டு வறுத்து விட்டு வெள்ளை எள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக சர்க்கரையை சேர்த்து வதக்கி இறக்கவும்
  • கலவை சற்று கெட்டியாக இருக்கும் போதே எடுத்து  ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.
  • பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
  • உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான சப்பாத்தியாக தேய்த்து அதை எடுத்து சோமாஸ் செய்யும் அச்சியில் வைத்து அதனுள் செய்து வைத்திருக்கும் பில்லிங்கை வைத்து மூடி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து செய்து வைத்திருக்கும் சோமாஸை போட்டு பொரித்து எடுக்கவும். 
Related Posts with Thumbnails