தக்காளி சாதம்

Tamil Cooking recipe for Tomato Rice
தேவையான பொருட்கள்
 1. பட்டை - 2
 2. கிராம்பு - 2
 3. ஏலக்காய் - 2
 4. வெங்காயம் - 1
 5. தக்காளி - 2
 6. இஞ்சி பூண்டு விழுது - 
 7. பச்சை மிளகாய் - 2
 8. புதினா - 10 
 9. கொத்தமல்லி - கொஞ்சம் 
 10. மஞ்சதூள் - 1/2 மேஜைகரண்டி
 11. மிளகாய் தூள் - 2 மேஜைகரண்டி
 12. கெட்டியான தயிர் - 1 மேஜைகரண்டி
 13. நெய் - 2 மேஜைகரண்டி 
 14. எண்ணெய் - 2 மேஜைகரண்டி 
 15. உப்பு - தேவையான அளவு
 16. பாசுமதி அரிசி - 1 கப்
 17. தேங்காய் பால் - 1 கப்
 18. தண்ணீர் - 1 /2 cup 
               செய்முறை 
               • குக்கரில்   நெய்,  எண்ணெய் விட்டு அதில்   பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயம் பச்சைமிளகாய்   சேர்த்து  பொன்னிறமாக  வதக்கவும்.
               • பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்ச வாசம் போக வதக்கவும் 
               • அதில் தக்காளி சேர்த்து நன்றாக  வதக்கவும் 
               • மிளகாய் தூள் மஞ்ச தூள் உப்பு சேர்த்து கிண்டவும்
               • புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் அதில் தயிர் சேர்த்து நன்றாக  வதக்கவும் 
               • பின் அதில் தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து அரிசி சேர்த்து  குக்கர் மூடி வெயிட் போட்டு 10 நிமிடம் குறைந்த தியில் வைத்து இறக்கவும் 
               • சுவையான தக்காளி சாதம்  ரெடி 
               Related Posts with Thumbnails