பாதாம் பர்பி

Cooking recipe for Badam Burfi


தேவையான பொருட்கள்
  1. பாதாம் பருப்பு - 1 1/2 கப்
  2. சர்க்கரை - 3  கப்
  3. நெய் - 3 /4 கிராம்
  4. பால் - 1 /4 கப் 
  5. குங்குமப்பூ - 1 கிராம்
  6. மஞ்சள் கலர்  - ஒரு சிட்டிகை

செய்முறை
  • பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து,  அவற்றின் தோல் உரித்து நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.
  • அலசிய பாதாம் பருப்புகளை பால்   விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து பாதாம் பருப்பு விழுது,  சர்க்கரையைப் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
  • சிறுது சிறுதாகநெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  • குங்குமப்பூ 1 ஸ்பூன்  பாலில் கலந்து சேர்க்கவும்  
  • நன்றாக சுருண்டு பர்பி பதம் வரும் பொது அடுப்பை ஆப் செய்யவும்.
  • பின்பு வாணலியை கீழே இறக்கி,  வைக்கவும்
  • ஒரு தட்டில் நெய் தடவி பர்பி கலவையை கொட்டி  டைமண்ட் ஷேப்பில கட் செய்யவும்.  
  • பாகு முறிந்து விடாமல் கவனிக்க வேண்டும். பர்பி வகைகளுக்கே பாகு மிகவும் இளம் கம்பிப் பதமாக இருக்க வேண்டும். அல்லது பர்பி மிருதுவாக இருக்காது. பர்பி வகைகளுக்கு தீ நிதானமான எரிய வேண்டும்.




Related Posts with Thumbnails