தக்காளி சாதம்

Tamil Cooking recipe for Tomato Rice
தேவையான பொருட்கள்
  1. பட்டை - 2
  2. கிராம்பு - 2
  3. ஏலக்காய் - 2
  4. வெங்காயம் - 1
  5. தக்காளி - 2
  6. இஞ்சி பூண்டு விழுது - 
  7. பச்சை மிளகாய் - 2
  8. புதினா - 10 
  9. கொத்தமல்லி - கொஞ்சம் 
  10. மஞ்சதூள் - 1/2 மேஜைகரண்டி
  11. மிளகாய் தூள் - 2 மேஜைகரண்டி
  12. கெட்டியான தயிர் - 1 மேஜைகரண்டி
  13. நெய் - 2 மேஜைகரண்டி 
  14. எண்ணெய் - 2 மேஜைகரண்டி 
  15. உப்பு - தேவையான அளவு
  16. பாசுமதி அரிசி - 1 கப்
  17. தேங்காய் பால் - 1 கப்
  18. தண்ணீர் - 1 /2 cup 
                              செய்முறை 
                              • குக்கரில்   நெய்,  எண்ணெய் விட்டு அதில்   பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயம் பச்சைமிளகாய்   சேர்த்து  பொன்னிறமாக  வதக்கவும்.
                              • பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்ச வாசம் போக வதக்கவும் 
                              • அதில் தக்காளி சேர்த்து நன்றாக  வதக்கவும் 
                              • மிளகாய் தூள் மஞ்ச தூள் உப்பு சேர்த்து கிண்டவும்
                              • புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் அதில் தயிர் சேர்த்து நன்றாக  வதக்கவும் 
                              • பின் அதில் தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து அரிசி சேர்த்து  குக்கர் மூடி வெயிட் போட்டு 10 நிமிடம் குறைந்த தியில் வைத்து இறக்கவும் 
                              • சுவையான தக்காளி சாதம்  ரெடி 

                              தேங்காய் சாதம்

                              Tamil Cooking recipe for Coconut Rice
                              தேவையான பொருட்கள் 
                                1. சாதம் - 1 கப்
                                2. தேங்காய் - 1/2 முடி
                                3. பச்சை மிளகாய் - 3
                                4. கடுகு - 1 /2 மேஜைகரண்டி 
                                5. உளுத்தம் பருப்பு - 1 மேஜைகரண்டி 
                                6. கடலைப் பருப்பு - 1 /2 மேஜைகரண்டி 
                                7. கறிவேப்பில்லை - 4 
                                8. உப்பு - தேவையான அளவு 
                                9.  எண்ணெய் - 2 மேஜைகரண்டி
                                                  செய்முறை 
                                                    • முதலில்  தேங்காய்  துருவி கொள்ளவும்   பச்சைமிளகாய் துண்டாக வெட்டி கொள்ளவும்   
                                                    • ஒரு வாணலியில்  எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளித்து பின்  உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு,   சேர்த்து வறுக்கவும்.
                                                    • அதன் பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
                                                    •  வதங்கிய பிறகு உப்பு , சேர்த்து தேங்காய் துருவல்  சேர்த்து நன்றாக  வதக்கவும்.
                                                    • கடைசியில் சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.
                                                    • இப்பொழுது சுவையான தேங்காய் சாதம் ரெடி.

                                                              சர்க்கரை பொங்கல்


                                                                Tamil Cooking Recipe for Sakkarai Pongal
                                                                தேவையான பொருட்கள் 

                                                                1. பச்சரிசி -1 கப்
                                                                2. பால் -2 கப்
                                                                3. தண்ணீர் - 2 கப் 
                                                                4. வெல்லம் - 1 கப் 
                                                                5. ஏலக்காய் தூள் - 1 மேஜைகரண்டி 
                                                                6. உப்பு -தேவையான அளவு 
                                                                7. நெய் - 1/2 கப்
                                                                8. முந்திரி - 10 
                                                                9.  திராட்சை - 10௦
                                                                10. ஜாதிக்காய் - 1 சிட்டிகை 
                                                                11. பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை  
                                                                                      செய்முறை
                                                                                      • அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர்,  பால் அரிசி  சேர்த்து நன்றாக வேகவிடவும் 
                                                                                      • பின் வாணலியில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி அதில் சேர்க்கவும் 
                                                                                      • அதில் உப்பு சேர்க்கவும்
                                                                                      • கடைசியாக ஜாதிக்காய் பச்சை கற்பூரம் ஏலக்காய் தூள் சேர்க்கவும் 
                                                                                      • பின் நெய் கொதிக்கவைத்து அதில் முந்திரி திராட்சை சேர்க்கவும் 
                                                                                      • சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி.

                                                                                                  கற்கண்டு சாதம்

                                                                                                  Tamil Cooking Recipe for karkandu Rice
                                                                                                  தேவையான பொருட்கள் 
                                                                                                  1. சாதம் - 1  கப்
                                                                                                  2.  கற்கண்டு - 1 கப்
                                                                                                  3. முந்திரிப் பருப்பு - 10
                                                                                                  4. திராட்சை - 5
                                                                                                  5. ஏலக்காய்பொடி- 1/4 டீஸ்பூன்
                                                                                                  6. நெய் - 5 மேஜைகரண்டி 
                                                                                                  7. உப்பு - 1 சிட்டிகை
                                                                                                  செய்முறை 
                                                                                                  • வாணலியில் சிறிது நெய் விட்டு, முந்திரி,   திராட்சை,        வறுக்கவும் 
                                                                                                  • சாதம் நன்றாக குழைவாக வடித்துக் கொள்ளவும்.
                                                                                                  • வேறு ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் விட்டு,  கற்கண்டு போட்டு சிறிது நீர் விட்டு கரைய விடவும்.
                                                                                                  • சாதத்தை கற்கண்டு கலவையில் போட்டு சிறிது நீர் விட்டு அடிப்பிடிக்காமல் கிளறவும்.
                                                                                                  • நன்றாக கலந்த சமயம் உப்பு,  ஏலப்பொடி, முந்திரி,  திராட்சை,   நெய் எல்லாமும் சேர்த்து கிளறி எடுக்கவும்.

                                                                                                  கொத்தமல்லி சாதம்


                                                                                                  Tamil Cooking recipe for Cilantro Rice
                                                                                                  தேவையான பொருட்கள் 
                                                                                                  1. சாதம் -1 கப்
                                                                                                  2. சின்ன வெங்காயம் - 1 /4 கப் 
                                                                                                  3. உப்பு - தேவையான பொருட்கள் 
                                                                                                  4. நெய் - 2 மேஜைகரண்டி 
                                                                                                  அரைக்க  
                                                                                                  1. கொத்தமல்லி – 1/2 கப்
                                                                                                  2. சிரகம்- 1 மேஜைகரண்டி 
                                                                                                  3. பச்சை மிளகாய்  – 2 
                                                                                                  4. பூண்டு  – 4 
                                                                                                    செய்முறை 
                                                                                                  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும் 
                                                                                                  • வாணலியில் சிறிது நெய் விட்டு, வெங்காயம் வதக்கி அதில் அரைத்த விழுது சேர்த்து தண்ணீர் வற்ற விட வேண்டும் 
                                                                                                  • தண்ணீர் வற்றிய பிறகு சாதம்  உப்பு  சேர்த்து கிண்டி இறக்கவும்
                                                                                                  Related Posts with Thumbnails