தக்காளி குருமா

Tamil Cooking recipe for Tomato Kurma

தேவையான பொருட்கள் 
 1. தக்காளி - 4
 2. தேங்காய் துருவல் - 4 மேஜை கரண்டி  
 3. சிகப்பு மிளகாய் - 4
 4. சோம்பு -1 ஸ்பூன் 
 5. இஞ்சி பூண்டு  -1 ஸ்பூன் 
தாளிக்க 
 1. கரம் மசாலா - 1 மேஜை கரண்டி 
 2. சின்ன வெங்காயம் -10
 3. கறிவேப்பிலை - 6 
செய்முறை 
 • முதலில் தக்காளி வேகவைத்து ஆரிய பின் தோல் நிக்கி மிக்ஸ்யில் அரைத்து எடுத்துவைத்து கொள்ளவும் 
 • மிக்ஸ்யில் தேங்காய் துருவல்,சோம்பு , இஞ்சி ,பூண்டு, மிளகாய்  சேர்த்து அரைத்து கொள்ளவும் 
 • வாணலியில் எண்ணெய் சேர்த்து கரம் மசாலா தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் 
 • அதில் தேங்காய் கலவை சேர்த்து நன்றாக வதக்கி பின் அரைத்த தக்காளி சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும் 
 •  கொதித்தபின் இறக்கி பரிமாறவும் 
 • இட்லி ,தோசை,சப்பாத்திக்கு   சுவையாக இருக்கும் 


Related Posts with Thumbnails