பிரெட் அல்வா


Tamil Cooking recipe for Bread Halwa




தேவையான பொருட்கள்
  1. பிரெட் ஸ்லைசஸ் - 10
  2. சீனி - 1 1/2 கப்
  3. பால் - 1   1/2  கப் 
  4. முந்திரி - 15
  5. உலர்ந்த திராட்சை -10
  6. நெய் - 1 /2 கப்
  7. சிகப்பு கலர் - ஒரு சிட்டிகை
செய்முறை 
  • மில்க் பிரட் அல்லது சால்ட் பிரெட்.பிரெட் ஓரத்தை கட் செய்து வித்து விடவும்    
  • பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி  பொடித்து  கொள்ளவும்.
  • வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும்,    உடைத்த முந்திரிப் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே வாணலியில் பொடித்து வைத்துள்ள பிரெட்டை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு வாணலியில் 1 1/2  கப் பால்  ஊற்றிசக்கரை  போட்டு 3 நிமிடம் கிளறி விட்டு வேக விடவும்.
  • சக்கரை  பாகாக கரைந்து, கொதித்து பொங்கியது போன்று வரும் போது, வறுத்து வைத்துள்ள பிரெட் துகள்களைப் போட்டு நன்கு கிளறி விடவும்.
  • பிரட் துகள்கள் சற்று வெந்தவுடன் அதனுடன் நெய்,   சேர்த்து நன்கு கிளறி விடவும்
  • அல்வா பதம் வரும்போது, வறுத்த முந்திரி, திராட்சை சேரத்து கிளறி விடவும்.
  •  நறுக்கின முந்திரி சேர்த்து  பரிமாறவும்.

பாதாம் அல்வா

தேவையான பொருட்கள்


  1. பாதாம் பருப்பு - 1 1/2 கப்
  2. சர்க்கரை - 3  கப்
  3. நெய் - 3 /4 கிராம்
  4. பால் - 1 /4 கப் 
  5. குங்குமப்பூ - 1 கிராம்
  6. மஞ்சள் கலர்  - ஒரு சிட்டிகை
செய்முறை 

  • பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து,  அவற்றின் தோல் உரித்து நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.
  • அலசிய பாதாம் பருப்புகளை பால்   விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து பாதாம் பருப்பு விழுது,  சர்க்கரையைப் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
  • குங்குமப்பூ 1 ஸ்பூன்  பாலில் கலந்து வைக்கவும் கலவை பாத்திரத்தில் ஒட்டாதவாறு கிளறவும். 
  • பின்பு குங்குமப்பூ போடவேண்டும்
  • சிறுது  சிறுதாக நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  • நன்றாக சுருண்டு வரும் பொது அடுப்பை ஆப் செய்யவும்.
  • பின்பு வாணலியை கீழே இறக்கி,  வைக்கவும்
  • கலவை பாத்திரத்தில் ஒட்டாதவாறு கிளறவும்.

பூசணிக்காய் அல்வா

தேவையான பொருட்கள்
  1. முற்றிய பூசணிக்காய் - 1
  2. சர்க்கரை - 1 1/2 கிலோ
  3. தண்ணீர் - 4 கப்
  4. நெய் - 6 மேசைக்கரண்டி 
  5. திராட்சை - 8
  6. முந்திரி - 10
  7. ஏலப்பொடி - 2 சிட்டிகை
  8. ஜாதிக்காய் பொடி -2 சிட்டிகை
  9. கேசரிப்பவுடர் - 1 சிட்டிகை
செய்முறை  
  • பூசணிக்காயை  துருவி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி  திராட்சை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
  • துருவிய பூசணிக்காயை 4 கப்  தண்ணீரில் வேகவைத்து எடுத்து ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி பிழிந்தெடுக்க வேண்டும்.
  • வடிகட்டிய  பூசணிக்காயை தண்ணீர் எடுக்கவும்.
  • கேசரி கலர் சேர்க்கவும். 
  • இதனுடன் ஒன்றரை கிலோ சர்க்கரை சேர்த்து அடுப்பில் வேகவைக்க வேண்டும்.
  • சர்க்கரை பாகாக உருகி, மொத்தமாக இறுகி வரும் வேளையில் வருத்த முந்திரி சேர்த்து கிளறவும். 
  • இறக்குவதற்கு முன்பு,   ஏலப்பொடி,  ஜாதிக்காய் பொடி போட்டு சேர்த்துக் கிளறிவிடவும்.

                அசோகா அல்வா

                தேவையான பொருட்கள்
                • 1. பயத்தம் பருப்பு - 1 கப்
                • 2 .கோதுமை - 1 /4 கிலோ
                • 3. சீனி - 2 1/4 கப்
                • 4.எண்ணெய் - 1 /2 லிட்டர்
                • 5.நெய் - 1/4 கப்
                • 6.ஏலக்காய் பொடி- 5
                • 7.முந்திரி - 15 
                • 8.திராட்சை - 15 
                செய்முறை 
                • முதலில் பயத்தம் பருப்பை வேகவைத்து தண்ணீராக கடைந்து வைத்துக் கொள்ளவும்.
                • அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய்,    டால்டா இரண்டையும் சேர்த்து   அதில் கோதுமை மாவை கொட்டி சிறு  தியில்  சிவக்கும் வரை கிளறவும்.
                • வேக வைத்த பயத்தம் பருப்பை அதில் ஊற்றி கிளறவும்.
                • பிறகு கலர்  பவுடரை கரைத்து ஊற்றி சக்கரை  போட்டு நன்றாக கிளறவும்.
                • பின் நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து ஏலக்காயை பொடிச் செய்து அதில்  போடவும்.
                • அரை மணி நேரம் அடுப்பில் தீயை குறைத்து வைத்து கிளறி பதம் வந்தவுடன் இறக்கவும் .

                பீட்ரூட் அல்வா


                தேவையான பொருட்கள் 
                1. பீட்ரூட் - 1/2 கிலோ
                2. சீனி - 300 கிராம்
                3. நெய் - 50 கிராம்
                4. பால் - 1 /2 லிட்டர்
                5. திராட்சை - 5 
                6. முந்திரி - 10 
                செய்முறை 
                • பீட்ரூட் தோலை சீவி நன்றாக துருவிக் கொள்ளவேண்டும்.
                • பின் காடியில் துருவிய பீட்ரூட் சேர்த்து தண்ணீர் போக நன்றாக  வதக்கவும்.
                • அதன்பின்  பாலை ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்.
                • பீட்ரூட் நன்றாக வெந்தவுடன் அதில் சக்கரை போட்டு கிளறி விடவேண்டும். சீனி நன்றாக கரைந்தவுடன் இதில் நெய்,   போட்டு கிளற வேண்டும்.
                • அல்வா பதம் வந்தவுடன் வருத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

                கோதுமை அல்வா


                தேவையான பொருட்கள் 
                1. சம்பா கோதுமை - 250 கிராம்
                2. சீனி - 750 கிராம்
                3. நெய் - 250 கிராம்
                4. முந்திரிப்பருப்பு - 50 கிராம்
                5. ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
                6. எலுமிச்சை - அரை மூடி
                7. உப்பு - 1  சிட்டிகை
                செய்முறை
                • கோதுமையை முந்தினம் இரவே ஊறவைத்து மறுநாள் காலை ஆட்டி பிழிந்து பால் எடுத்து தனியே வைத்துவிடவும்.
                • முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி  வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
                • பிறகு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில்  வைத்து  கோதுமை பாலில் சீனியைக் கொட்டி,  கலர்பொடி சேர்த்து அடிப்பிடிக்காமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.
                • ஒட்டும்பொழுது சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
                • அல்வா பதம் வரும்போது நெய் கக்க ஆரம்பிக்கும். அப்போது சிறிது எலுமிச்சம்பழம் பிழிந்து,  ஏலப்பொடி உப்பு  கலந்து, வருத்த முந்திரி சேர்க்கவும் 
                • நெய் கக்கின பிறகு சுமார் அரை மணி நேரம் வரை கிண்டி இறக்கவும். 

                காரட் அல்வா


                Tamil Cooking Recipe for Carrot Halwa



                தேவையான பொருட்கள்
                1. காரட் - 4 பெரிதாக 
                2. பால் கோவா- 100 கிராம் 
                3. சக்கரை - 2 கப் 
                4. பால்- 1 கப் 
                5. முந்திரி -15
                6. திராட்சை - 10
                7. ஏலக்காய் - 2  சிட்டிகை
                8. நெய் - 2 மேஜை கரண்டி
                செய்முறை 
                • முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி  திராட்சை  வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
                • காரட்  தோலை நன்றாக சீவி நன்றாக துருவிக் கொள்ளவேண்டும்.
                • பின் காடியில் துருவிய காரட் சேர்த்து தண்ணீர் போக நன்றாக  வதக்கவும்.
                • பின் பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக  வெந்தவுடன் சக்கரை சேர்த்து கோவா ஏலக்காய் சேர்த்து கிண்டவும்.
                • அல்வா பதம் வந்தவுடன்
                • பின் வருத்த முந்திரி திராட்சை சேர்த்து ஒன்று சேர்த்து வதக்கி ஆப் செய்யவும்.
                குறிப்பு

                • பால் கோவா இல்லை என்றால் பரவாஇல்லை 

                ப்ரூட் கேசரி

                Cooking recipe for Fruit Kesari


                தேவையான பொருட்கள்
                1. ரவை - 1 கப்
                2. ஆப்பிள் - 1 /2 கப்
                3. அன்னாசி - 1 /2 கப்
                4. மாம்பழம் - 1 /2 cup
                5. திராட்சை - 100 கிராம்
                6. சர்க்கரை - இரண்டரை கப்
                7. நெய் - 1 /2 கப் 
                8. முந்திரி - 1 /4 கப்
                9. உப்பு -1 சிட்டிகை
                10. ஏலக்காய் - 2  சிட்டிகை
                செய்முறை
                • முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
                • கடாயில் முன்று  மேஜை கரண்டி நெய் ஊற்றி ரவையை  சிறு தியில்  வைத்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்
                • ஆப்பிள், அன்னாசி,  திராட்சை மாம்பழதோல் சிவி சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்
                • ஆப்பிள், அன்னாசி,  திராட்சை மாம்பழம துண்டுகளை சக்கரையில் சேர்த்து 1 மணி நேரம் உறவிடவும்  
                • பால் மற்றும் தண்ணீரை, கலர்  உடன்   சேர்த்து கொதிக்கவைக்கவும்.
                • தண்ணீர் நன்றாக  கொதிவரும் போது, ரவையை சிறிது சிறிதாக  சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்.
                • ரவை முக்கால் பாகம் நன்றாக வெந்த பிறகு உப்பு சக்கரை மற்றும் பழங்களை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கிளறி விடவும்.
                • பின் வருத்த முந்திரி  சேர்த்து கிளறவும்
                • சுவையான  ப்ரூட் கேசரி ரெடி.

                கோதுமை கேசரி

                Cooking recipe for Wheat Kesari


                தேவையான பொருட்கள்
                1.  கோதுமை ரவை - 1 கப்
                2.  சீனி - 1 கப்
                3. முந்திரி  பருப்பு - 6
                4. பாதாம் பருப்பு - 6
                5. கிஸ்மிஸ் பழம் -6
                6. நெய் - 4 தேக்கரண்டி
                7. ஏலக்காய் பொடி- 2 சிட்டிகை
                8. பால் - 1 1 /2கப் 
                9. சூடான தண்ணீர் - 1 1/2 கப்
                செய்முறை 
                • முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி  பாதாம்  வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
                • கடாயில் முன்று  மேஜை கரண்டி நெய் ஊற்றி கோதுமை ரவை சிறு தியில்  வைத்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்
                • பால் மற்றும் தண்ணீரை   சேர்த்து கொதிக்கவைக்கவும்
                • தண்ணீர் நன்றாக கொதிவரும்போது, கோதுமை ரவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்
                • மேலே 3 தேக்கரண்டி நெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்திருக்கவும்
                • கோதுமைரவை கலவை நன்றாக வெந்ததும் சக்கரை உப்பு  ஏலக்காய்தூள் போட்டு விடவும்
                • வறுத்து வைத்திருக்கும் முந்திரி பாதாம் கிஸ்மிஸ் பழம் கேசரியில் போட்டு கிளறி விடவும்.

                நட்ஸ் கேசரி

                  Cooking recipe for Nuts Kesari


                  தேவையான பொருட்கள்
                  1. ரவை - 1 கப்
                  2. சீனி - 3 /4 கப்
                  3. மில்க் மெய்டு - 5 மேசைக்கரண்டி 
                  4. கேசரி கலர் - 2 சிட்டிகை
                  5. பாதாம் - 5
                  6. பிஸ்தா - 5
                  7. முந்திரி - 5
                  8. நெய் - 5  மேசைக்கரண்டி
                  9. பால் - 3 /4 கப்
                  10. தண்ணீர் -1 cup
                  செய்முறை
                  • முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
                  • கடாயில் முன்று  மேஜை கரண்டி நெய் ஊற்றி ரவையை  சிறு தியில்  வைத்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்
                  • பாதாம்,, பிஸ்தாவை தோல் நீக்கி,முந்திரியுடன் சேர்த்து 3 மேசைக்கரண்டி பால் ஊற்றி மிக்ஸியில் மை போல் அரைத்துக்கொள்ளவும்.
                  • பின் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும் ,கொதிக்கும் பொது  கேசரி கலர் மற்றும்  ரவை சேர்த்து வேகவிடவும் 
                  • வெந்ததும்  சக்கரை சேர்த்து கிளறவும்.
                  • பின் அரைத்த கலவையை ஊற்றி கிளறவும்.
                  • பின் மில்க் மெய்டு ஊற்றி கிளறவும்.மில்க் மெய்டு,  முந்திரி கலவையை ஊற்றியபின் அடி பிடிக்க ஆரம்பிக்கும் அதனால் கைவிடாமல் கிளறவும்.பின் நெய் ஊற்றி கிறவும்.
                  • நன்கு கேசரி பதம் வந்ததும் இறக்கிவிடவும்.

                  அரிசி கேசரி

                  Cooking recipe for Rice Kesari


                  தேவையான பொருட்கள்
                  1. பச்சரிசி - 1 கப்
                  2. தண்ணீர் - 1  1 /2 கப்
                  3. பால் -1 கப் 
                  4. முந்திரிப்பருப்பு - 15
                  5. சீனி - 2 கப்
                  6. நெய் - 1 /4 மேசைக்கரண்டி
                  7. ஏலக்காய் பொடி-2 சிட்டிகை
                  8. கேசரி கலர் பவுடர் - 2 சிட்டிகை
                  9. உப்பு - ஒரு சிட்டிகை 
                  செய்முறை
                  •  வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி  நெய் ஊற்றி அரிசியை போட்டு சிறு தியில் நன்கு வறுக்கவும். அரிசி நன்கு  பொரிந்து  நிறம் சற்று மாறியதும் எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆறவைக்கவும்.
                  • வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
                  • அதே வாணலியில் 2 1 /2 கப் தண்ணீர் ஊற்றி அதில் கலர் பவுடரை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போது ஏலக்காய் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.
                  • அரிசி ஆறியதும் மிக்ஸியில் அரிசியை போட்டு ரவை பதத்திற்கு பொடிக்கவும்
                  • தண்ணீர் கொதித்ததும் பொடித்த அரிசியை கொட்டி கொண்டே கிளறி விடவும். கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
                  • அரிசி வெந்த பிறகு சீனியை சேர்த்து கிளறி விடவும். அதில் வறுத்த முந்திரியை போட்டு மூன்று மேசைக்கரண்டி நெய் ஊற்றி ஐந்து நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்.
                  • கெட்டியான பதம் வந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கவும். தேவைப்பட்டால் மேலும் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
                  • சுவையான அரிசி கேசரி ரெடி

                  Related Posts with Thumbnails