கற்கண்டு சாதம்

Tamil Cooking Recipe for karkandu Rice
தேவையான பொருட்கள் 
 1. சாதம் - 1  கப்
 2.  கற்கண்டு - 1 கப்
 3. முந்திரிப் பருப்பு - 10
 4. திராட்சை - 5
 5. ஏலக்காய்பொடி- 1/4 டீஸ்பூன்
 6. நெய் - 5 மேஜைகரண்டி 
 7. உப்பு - 1 சிட்டிகை
செய்முறை 
 • வாணலியில் சிறிது நெய் விட்டு, முந்திரி,   திராட்சை,        வறுக்கவும் 
 • சாதம் நன்றாக குழைவாக வடித்துக் கொள்ளவும்.
 • வேறு ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் விட்டு,  கற்கண்டு போட்டு சிறிது நீர் விட்டு கரைய விடவும்.
 • சாதத்தை கற்கண்டு கலவையில் போட்டு சிறிது நீர் விட்டு அடிப்பிடிக்காமல் கிளறவும்.
 • நன்றாக கலந்த சமயம் உப்பு,  ஏலப்பொடி, முந்திரி,  திராட்சை,   நெய் எல்லாமும் சேர்த்து கிளறி எடுக்கவும்.
Related Posts with Thumbnails