முட்டை கொத்து பரோட்டா

Tamil Cooking recipe for Kottu Parotta
தேவையான பொருட்கள் 
 1. முட்டை - 3
 2. வெங்காயம் -2
 3. தக்காளி - 1
 4. கரம் மசாலா - 1 /2 டீஸ்பூன் 
 5. மிளகாய் தூள் - 1 /2 டீஸ்பூன் 
 6. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
 7. உப்பு - 1 /4 டீஸ்பூன்
 8. மிளகு தூள் - 3 டீஸ்பூன் 
 9. பரோட்டா - 3
 10. கொத்தமல்லி -3 டீஸ்பூன் 
 11. கறிவேப்பில்லை - 10
 12. எலுமிச்சம் பழ சாறு- 3 டீஸ்பூன் 
 13. எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை 
 • பரோட்டாவை பொடியாக நறுக்குங்கள் (அல்லது) மிக்சில  லேசா பிரஸ் பண்ணலாம் 
 • முட்டையை நன்கு அடித்து கொள்ளுங்கள் 
 • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதகுங்கள் பின் தக்காளி வதக்கவும் 
 • வதக்கி கொண்டு இருக்கும் போதே கரம் மசாலா, மிளகாய் தூள் ,மஞ்சள் தூள்,   உப்பு   சேர்த்து வதக்கவும்
 • பின் பரோட்டா சேர்த்து வதக்கவும் நன்றாக கொத்தி கிண்டவும் 
 • பிறகு அடித்த முட்டை சேர்த்து நன்றாக கிண்டவும் கடைசியாக  மிளகு தூள் சேர்க்கவும் 
 • கொத்தமல்லி தூவி இறக்கவும் 
 • பரிமாறும் போது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து பரிமாறவும் 
 • சுவையாக இருக்கும் 
குறிப்பு
முட்டை போடாமலும் இதே மாதிரி செய்யலாம் மேலும்: சில்லி பரோட்டாபரோட்டா
Related Posts with Thumbnails