கடலைப்பருப்பு வெல்ல போளி


Cooking recipe for Channa Bholi


தேவையான பொருட்கள்
  1. கடலைப்பருப்பு- 1 கப் 
  2. வெல்லம் - 3 /4 கப் 
  3. தேங்காய் துருவல் - 1 /4 கப் 
  4. ஏலக்காய் பொடி - 2  சிட்டிகை
  5. மைதா 1 1 /4 கப் 
  6. உப்பு -கால் தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் -கால் தேக்கரண்டி
  8. நெய் - தேவையான அளவு 
செய்முறை
  • கடலைப்பருப்பு 1 மணி நேரம்   ஊற வைக்கவும். 
  • மைதா மாவுடன் உப்பு, கலர் பவுடர், ஒன்றரை மேசைக்கரண்டி நெய்  தண்ணீர் சேர்த்து பூரிமாவை விட சற்று தளர்வாக பிசைந்து 2 மணிநேரம் ஊற வைக்கவும். 
  •  ஊறிய கடலைப்பருப்பை குலையாமல் வேகவைத்து வடித்து எடுத்து ஆற வைக்கவும்.
  • ஆறியதும்  அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். 
  • வெல்லத்தை சிறுது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, திரும்பவும் நன்றாக அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் 
  • அதில் அரைத்து வைத்துள்ள  கடலைப்பருப்பு கலவையை  ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்
  • கெட்டியாக வரும் பக்குவத்தில் சிறுது நெய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும் 
  • ஆறியதும் சிறிய எலுமிச்சை பழ உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • மைதா மாவையும் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • மைதா மாவு உருண்டையை கையால் சிறிய  அளவிற்கு வட்டமாக தட்டி அதில் கடலைப்பருப்பு கலவையை  உருண்டையை நடுவில் வைத்து மூடி விட்டு உருட்டி கொள்ளவும். 
  •  பிறகு அந்த உருண்டையை  கையால் தட்டி கொள்ளவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை வைத்து  தட்டி வைத்த போளியை போட்டு சுற்றிலும் நெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து விடவும்.
Related Posts with Thumbnails