தேங்காய் சாதம்

Tamil Cooking recipe for Coconut Rice
தேவையான பொருட்கள் 
  1. சாதம் - 1 கப்
  2. தேங்காய் - 1/2 முடி
  3. பச்சை மிளகாய் - 3
  4. கடுகு - 1 /2 மேஜைகரண்டி 
  5. உளுத்தம் பருப்பு - 1 மேஜைகரண்டி 
  6. கடலைப் பருப்பு - 1 /2 மேஜைகரண்டி 
  7. கறிவேப்பில்லை - 4 
  8. உப்பு - தேவையான அளவு 
  9.  எண்ணெய் - 2 மேஜைகரண்டி
           செய்முறை 
            • முதலில்  தேங்காய்  துருவி கொள்ளவும்   பச்சைமிளகாய் துண்டாக வெட்டி கொள்ளவும்   
            • ஒரு வாணலியில்  எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளித்து பின்  உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு,   சேர்த்து வறுக்கவும்.
            • அதன் பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
            •  வதங்கிய பிறகு உப்பு , சேர்த்து தேங்காய் துருவல்  சேர்த்து நன்றாக  வதக்கவும்.
            • கடைசியில் சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.
            • இப்பொழுது சுவையான தேங்காய் சாதம் ரெடி.
                 Related Posts with Thumbnails