வெள்ளை குருமா

Tamil Cooking recipe for White Kuruma

தேவையான பொருட்கள் 
  1. வெங்காயம் - 1
  2. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  3. காரட் - 1
  4. உருளைகிழங்கு - 1
  5. தேங்காய் - 1/4 கப்
  6. சோம்பு - 1 தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் - 5
  8. எலுமிச்சை பழம் - 1
  9. கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க:
  1. பட்டை - 1
  2. கிராம்பு -2
  3. ஏலக்காய் - 1
செய்முறை 
  • முதலில் காரட்,  மற்றும் உருளைக்கிழங்கினை  நறுக்கி கொள்ளவும்.
  • பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
  • தேங்காய் சோம்பு  மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும் .
  • ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பொடித்து வைத்துள்ள பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயினை இதில் சேர்க்கவும்.
  • வெங்காயத்தினை போட்டு வதக்கவும்.
  • பின் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.
  • அதன் பின் நறுக்கி வைத்துள்ள காய்கறியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • அதன் பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் விழுதினை சிறிது தண்ணீர் சேர்த்து இதில் ஊற்றவும்.
  • உப்பு சேர்த்து கலக்கி நன்றாக வேகவிடவும்.
  • கடைசியில் கொத்தமல்லி சேர்க்கவும்.
  • கடைசியாக எலுமிச்சை  இதில் பிழியவும்.
  • சப்பாத்திக்கு  சுவையாக இருக்கும் 
Related Posts with Thumbnails