எலுமிச்சம்பழ சாதம்

Tamil Cooking recipe for Lemon Rice
தேவையான பொருட்கள் 

 1. பச்சரிசி - 1 கப்
 2. தண்ணீர் - 2 கப்
 3. எலுமிச்சம்பழம் சாறு - 6 மேஜைகரண்டி 
 4. மஞ்சள்தூள் - 1 /4  மேஜைகரண்டி
 5. காய்ந்த மிளகாய் - 3
 6. கடுகு - 1 மேஜைகரண்டி
 7. உளுத்தம்பருப்பு - 2 மேஜைகரண்டி
 8. கடலைப்பருப்பு - 2 மேஜைகரண்டி
 9. பெருங்காய தூள் -  1  மேஜைகரண்டி
 10. கொத்தமல்லித்தழை - சிறிது
 11. எண்ணெய் - 2 கரண்டி 
 12. உப்பு - தேவையான அளவு 
            செய்முறை 
            • சாதத்தை குழைய விடாமல் வேக வைத்து எடுத்து  தட்டில் கொட்டி ஆறவிடவும்.
            •  வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு,  கடுகு உளுத்தம்பருப்பு,  கடலைப்பருப்பைப் போட்டு பொரிக்க வேண்டும்.
            • பிறகு மிளகாய்களைப் போட்டு,      பிறகு பெருங்காயத்தையும் மஞ்சள்தூளையும் உப்பு  எலுமிச்சை சாற்றினை   போட்டு கிளறி ஆற வைத்த சாதத்தை கிண்டி கொள்ளவும் 
            • இறுதியில் சிறிது கொத்தமல்லித் தழையை தூவி விடவும்.
               Related Posts with Thumbnails