ப்ரைடு ரைஸ்

Tamil Cooking recipe for Fried Rice

தேவையான பொருட்கள் 
 1. பாசுமதி அரிசி - 1 கப்
 2. வெங்காயம் - 1 கப்(மெலிசாக நிட்டமாக வெட்டவும்)
 3. காரட் - 1 (பொடியாக வெட்டவும் )
 4. பீன்ஸ் - ௧௦ (பொடியாக வெட்டவும் )
 5. பச்சை பட்டாணி - 1 /2 கப் (வேகவைத்து எடுத்து கொள்ளவும் )
 6. வெங்காய தாள்  - 1 (பொடியாக வெட்டவும் )
 7. குடைமிளகாய் - 2 (மெலிசாக நிட்டமாக வெட்டவும்)
 8. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைகரண்டி
 9. சில்லி சாஸ் - 1 மேஜைகரண்டி
 10. சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
 11. மிளகு தூள் -1 மேசைக்கரண்டி
 12. நெய் - 1/4 கப் 
 13. உப்பு - தேவையான அளவு 
செய்முறை 
 • சாதம் உதிர் உதிரக  வடித்து  ஆற வைத்து கொள்ளவும் 
 • ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
 • வெங்காயத்தாளையும் வதக்கிக் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும். அதன் பின் காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
 • அதில் உப்பு,  சோயா சாஸ், சில்லி சாஸ்,மிளகு தூள்  சேர்த்து நன்றாக வதக்கவும் மூடி வைத்து வேகவைக்கவும்  
 • காய்கறி நன்றாக வெந்தபின் ஆற வைத்த சாதம் சேர்த்து கிண்டவும் 
 • நன்றாக கிண்டி இறக்கவும் 
Related Posts with Thumbnails