சாம்பார்(Idly)

Tamil Cooking recipe for Idly Sambarதேவையான பொருட்கள் 
 1. துவரம் பருப்பு - 1 கப் 
 2. மஞ்சள் தூள்- 1 சிட்டிகை 
 3. பெருங்காய தூள் - 1 சிட்டிகை 
 4. எண்ணெய் -  1 சிட்டிகை  
 5. சின்ன வெங்காயம் -15
 6. தக்காளி -1
 7. காரட் -1
 8. உருளை கிழங்கு-1 
 9. பச்சை மிளகாய் -4
 10. சாம்பார் தூள் - 1 மேஜைகரண்டி 
 11. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க 
 1. கடுகு- 1 ஸ்பூன்  
 2. வெந்தயம்-1 /2 ஸ்பூன்  
 3. பெருங்காய தூள்- 1 சிட்டிகை  
 4. சிகப்பு மிளகாய் -1
 5. கறிவபில்லை -6

செய்முறை 


 • முதலில் துவரம் பருப்பினை மஞ்சள்தூள் பெருங்காயதூள் 1 ஸ்பூன் எண்ணெய் தண்ணீர் சேர்த்து  குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.
 • பின்னர் வெங்காயம்,  பச்சை மிளகாய் மற்றும் தக்காளி  போட்டு வதக்கவும்.
 • காய்கறி சேர்த்து வதக்கவும் 
 • அதன் பின் சாம்பார்தூள்  உப்பு மற்றும் வேக வைத்துள்ள துவரம் பருப்பினை  தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
 • சட்டியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு,வெந்தயம்  பெருங்காயதூள் ,சிகப்பு மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து  தாளித்து அதில் சேர்க்கவும்
 • கொதி வந்தவுடன்    கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Related Posts with Thumbnails