தக்காளி சாதம்

Tamil Cooking recipe for Tomato Rice
தேவையான பொருட்கள்
  1. பட்டை - 2
  2. கிராம்பு - 2
  3. ஏலக்காய் - 2
  4. வெங்காயம் - 1
  5. தக்காளி - 2
  6. இஞ்சி பூண்டு விழுது - 
  7. பச்சை மிளகாய் - 2
  8. புதினா - 10 
  9. கொத்தமல்லி - கொஞ்சம் 
  10. மஞ்சதூள் - 1/2 மேஜைகரண்டி
  11. மிளகாய் தூள் - 2 மேஜைகரண்டி
  12. கெட்டியான தயிர் - 1 மேஜைகரண்டி
  13. நெய் - 2 மேஜைகரண்டி 
  14. எண்ணெய் - 2 மேஜைகரண்டி 
  15. உப்பு - தேவையான அளவு
  16. பாசுமதி அரிசி - 1 கப்
  17. தேங்காய் பால் - 1 கப்
  18. தண்ணீர் - 1 /2 cup 
                              செய்முறை 
                              • குக்கரில்   நெய்,  எண்ணெய் விட்டு அதில்   பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயம் பச்சைமிளகாய்   சேர்த்து  பொன்னிறமாக  வதக்கவும்.
                              • பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்ச வாசம் போக வதக்கவும் 
                              • அதில் தக்காளி சேர்த்து நன்றாக  வதக்கவும் 
                              • மிளகாய் தூள் மஞ்ச தூள் உப்பு சேர்த்து கிண்டவும்
                              • புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் அதில் தயிர் சேர்த்து நன்றாக  வதக்கவும் 
                              • பின் அதில் தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து அரிசி சேர்த்து  குக்கர் மூடி வெயிட் போட்டு 10 நிமிடம் குறைந்த தியில் வைத்து இறக்கவும் 
                              • சுவையான தக்காளி சாதம்  ரெடி 

                              தேங்காய் சாதம்

                              Tamil Cooking recipe for Coconut Rice
                              தேவையான பொருட்கள் 
                                1. சாதம் - 1 கப்
                                2. தேங்காய் - 1/2 முடி
                                3. பச்சை மிளகாய் - 3
                                4. கடுகு - 1 /2 மேஜைகரண்டி 
                                5. உளுத்தம் பருப்பு - 1 மேஜைகரண்டி 
                                6. கடலைப் பருப்பு - 1 /2 மேஜைகரண்டி 
                                7. கறிவேப்பில்லை - 4 
                                8. உப்பு - தேவையான அளவு 
                                9.  எண்ணெய் - 2 மேஜைகரண்டி
                                                  செய்முறை 
                                                    • முதலில்  தேங்காய்  துருவி கொள்ளவும்   பச்சைமிளகாய் துண்டாக வெட்டி கொள்ளவும்   
                                                    • ஒரு வாணலியில்  எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளித்து பின்  உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு,   சேர்த்து வறுக்கவும்.
                                                    • அதன் பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
                                                    •  வதங்கிய பிறகு உப்பு , சேர்த்து தேங்காய் துருவல்  சேர்த்து நன்றாக  வதக்கவும்.
                                                    • கடைசியில் சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.
                                                    • இப்பொழுது சுவையான தேங்காய் சாதம் ரெடி.

                                                              சர்க்கரை பொங்கல்


                                                                Tamil Cooking Recipe for Sakkarai Pongal
                                                                தேவையான பொருட்கள் 

                                                                1. பச்சரிசி -1 கப்
                                                                2. பால் -2 கப்
                                                                3. தண்ணீர் - 2 கப் 
                                                                4. வெல்லம் - 1 கப் 
                                                                5. ஏலக்காய் தூள் - 1 மேஜைகரண்டி 
                                                                6. உப்பு -தேவையான அளவு 
                                                                7. நெய் - 1/2 கப்
                                                                8. முந்திரி - 10 
                                                                9.  திராட்சை - 10௦
                                                                10. ஜாதிக்காய் - 1 சிட்டிகை 
                                                                11. பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை  
                                                                                      செய்முறை
                                                                                      • அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர்,  பால் அரிசி  சேர்த்து நன்றாக வேகவிடவும் 
                                                                                      • பின் வாணலியில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி அதில் சேர்க்கவும் 
                                                                                      • அதில் உப்பு சேர்க்கவும்
                                                                                      • கடைசியாக ஜாதிக்காய் பச்சை கற்பூரம் ஏலக்காய் தூள் சேர்க்கவும் 
                                                                                      • பின் நெய் கொதிக்கவைத்து அதில் முந்திரி திராட்சை சேர்க்கவும் 
                                                                                      • சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி.

                                                                                                  கற்கண்டு சாதம்

                                                                                                  Tamil Cooking Recipe for karkandu Rice
                                                                                                  தேவையான பொருட்கள் 
                                                                                                  1. சாதம் - 1  கப்
                                                                                                  2.  கற்கண்டு - 1 கப்
                                                                                                  3. முந்திரிப் பருப்பு - 10
                                                                                                  4. திராட்சை - 5
                                                                                                  5. ஏலக்காய்பொடி- 1/4 டீஸ்பூன்
                                                                                                  6. நெய் - 5 மேஜைகரண்டி 
                                                                                                  7. உப்பு - 1 சிட்டிகை
                                                                                                  செய்முறை 
                                                                                                  • வாணலியில் சிறிது நெய் விட்டு, முந்திரி,   திராட்சை,        வறுக்கவும் 
                                                                                                  • சாதம் நன்றாக குழைவாக வடித்துக் கொள்ளவும்.
                                                                                                  • வேறு ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் விட்டு,  கற்கண்டு போட்டு சிறிது நீர் விட்டு கரைய விடவும்.
                                                                                                  • சாதத்தை கற்கண்டு கலவையில் போட்டு சிறிது நீர் விட்டு அடிப்பிடிக்காமல் கிளறவும்.
                                                                                                  • நன்றாக கலந்த சமயம் உப்பு,  ஏலப்பொடி, முந்திரி,  திராட்சை,   நெய் எல்லாமும் சேர்த்து கிளறி எடுக்கவும்.

                                                                                                  கொத்தமல்லி சாதம்


                                                                                                  Tamil Cooking recipe for Cilantro Rice
                                                                                                  தேவையான பொருட்கள் 
                                                                                                  1. சாதம் -1 கப்
                                                                                                  2. சின்ன வெங்காயம் - 1 /4 கப் 
                                                                                                  3. உப்பு - தேவையான பொருட்கள் 
                                                                                                  4. நெய் - 2 மேஜைகரண்டி 
                                                                                                  அரைக்க  
                                                                                                  1. கொத்தமல்லி – 1/2 கப்
                                                                                                  2. சிரகம்- 1 மேஜைகரண்டி 
                                                                                                  3. பச்சை மிளகாய்  – 2 
                                                                                                  4. பூண்டு  – 4 
                                                                                                    செய்முறை 
                                                                                                  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும் 
                                                                                                  • வாணலியில் சிறிது நெய் விட்டு, வெங்காயம் வதக்கி அதில் அரைத்த விழுது சேர்த்து தண்ணீர் வற்ற விட வேண்டும் 
                                                                                                  • தண்ணீர் வற்றிய பிறகு சாதம்  உப்பு  சேர்த்து கிண்டி இறக்கவும்

                                                                                                  புதினா சாதம்

                                                                                                  Tamil Cooking recipe for Mint Rice
                                                                                                  தேவையான பொருட்கள் 
                                                                                                  1. சாதம் -1 கப்
                                                                                                  2. உப்பு - தேவையான பொருட்கள் 
                                                                                                  3. நெய் - 2 மேஜைகரண்டி 
                                                                                                  அரைக்க 
                                                                                                  1. புதினா– 1/2 கப்
                                                                                                  2. பச்சை மிளகாய்  – 2 
                                                                                                  3. சீரகம்-1/2 மேஜைகரண்டி
                                                                                                  4. பூண்டு  – 4
                                                                                                  5. புளி – 1/4 மேஜைகரண்டி 
                                                                                                  6. தேங்காய் துருவல்  – 2 மேஜைகரண்டி 
                                                                                                    செய்முறை 

                                                                                                  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும் 
                                                                                                  • வாணலியில் சிறிது நெய் விட்டு, அரைத்த விழுது சேர்த்து தண்ணீர் வற்ற விட வேண்டும் 
                                                                                                  • தண்ணீர் வற்றிய பிறகு சாதம்  உப்பு  சேர்த்து கிண்டி இறக்கவும்

                                                                                                  புதினா&கொத்தமல்லி சாதம்

                                                                                                  Tamil Cooking recipe for Mint and Cilantro Rice
                                                                                                  தேவையான பொருட்கள் 
                                                                                                  1. சாதம் -1 கப்
                                                                                                  2. உப்பு - தேவையான பொருட்கள் 
                                                                                                  3. நெய் - 2 மேஜைகரண்டி 
                                                                                                  அரைக்க 
                                                                                                  1. புதினா– 1/2 கப் 
                                                                                                  2. கொத்தமல்லி  – 1/4 கப் 
                                                                                                  3. பச்சை மிளகாய்  – 2 
                                                                                                  4. பூண்டு  – 4
                                                                                                  5. புளி – 1/4 மேஜைகரண்டி 
                                                                                                  6. தேங்காய் துருவல்  – 2 மேஜைகரண்டி 
                                                                                                    செய்முறை 
                                                                                                  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும் 
                                                                                                  • வாணலியில் சிறிது நெய் விட்டு, அரைத்த விழுது சேர்த்து தண்ணீர் வற்ற விட வேண்டும் 
                                                                                                  • தண்ணீர் வற்றிய பிறகு சாதம்  உப்பு  சேர்த்து கிண்டி இறக்கவும் 



                                                                                                  எலுமிச்சம்பழ சாதம்

                                                                                                  Tamil Cooking recipe for Lemon Rice
                                                                                                  தேவையான பொருட்கள் 

                                                                                                  1. பச்சரிசி - 1 கப்
                                                                                                  2. தண்ணீர் - 2 கப்
                                                                                                  3. எலுமிச்சம்பழம் சாறு - 6 மேஜைகரண்டி 
                                                                                                  4. மஞ்சள்தூள் - 1 /4  மேஜைகரண்டி
                                                                                                  5. காய்ந்த மிளகாய் - 3
                                                                                                  6. கடுகு - 1 மேஜைகரண்டி
                                                                                                  7. உளுத்தம்பருப்பு - 2 மேஜைகரண்டி
                                                                                                  8. கடலைப்பருப்பு - 2 மேஜைகரண்டி
                                                                                                  9. பெருங்காய தூள் -  1  மேஜைகரண்டி
                                                                                                  10. கொத்தமல்லித்தழை - சிறிது
                                                                                                  11. எண்ணெய் - 2 கரண்டி 
                                                                                                  12. உப்பு - தேவையான அளவு 
                                                                                                                        செய்முறை 
                                                                                                                        • சாதத்தை குழைய விடாமல் வேக வைத்து எடுத்து  தட்டில் கொட்டி ஆறவிடவும்.
                                                                                                                        •  வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு,  கடுகு உளுத்தம்பருப்பு,  கடலைப்பருப்பைப் போட்டு பொரிக்க வேண்டும்.
                                                                                                                        • பிறகு மிளகாய்களைப் போட்டு,      பிறகு பெருங்காயத்தையும் மஞ்சள்தூளையும் உப்பு  எலுமிச்சை சாற்றினை   போட்டு கிளறி ஆற வைத்த சாதத்தை கிண்டி கொள்ளவும் 
                                                                                                                        • இறுதியில் சிறிது கொத்தமல்லித் தழையை தூவி விடவும்.

                                                                                                                              தயிர் சாதம்

                                                                                                                              Tamil Cooking recipe for Curd Rice
                                                                                                                              தேவையான அளவு 
                                                                                                                                1. அரிசி - 1 கப் 
                                                                                                                                2. பால் - 1 கப் 
                                                                                                                                3. தயிர் - 1 கப் 
                                                                                                                                4. பச்சை மிளகாய் - 2
                                                                                                                                5. இஞ்சி - 1 துண்டு
                                                                                                                                6. உப்பு - தேவையான அளவு 
                                                                                                                                7. கடுகு - 1 தேக்கரண்டி
                                                                                                                                8. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
                                                                                                                                9. பெருங்காய தூள் -1 தேக்கரண்டி
                                                                                                                                10. எண்ணெய் - சிறிது
                                                                                                                                                செய்முறை 
                                                                                                                                                  • குக்கரில் 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரிசி சேர்த்து சற்று குழைவாக வேகவைத்து கொள்ளவும். 
                                                                                                                                                  • பாலை நன்றாகக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
                                                                                                                                                  • சூடான சாதத்தில் பாலை ஊற்றி நன்றாகப் கலந்து கொள்ளவும்
                                                                                                                                                  • அதில் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும் 
                                                                                                                                                  • பிறகு உப்பையும், சேர்த்து கிண்டிகொள்ளவும்
                                                                                                                                                  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,  உளுத்தம்பருப்பு,  கறிவேப்பிலை,   போட்டுத் தாளித்து இஞ்சி, பச்சைமிளகாய்களை பெருங்காய தூள் போட்டு வறுத்து சாதத்தில் போடவும்.
                                                                                                                                                  • பிறகு கலந்து பரிமாறவும் 

                                                                                                                                                  கல்கண்டு சாதம்

                                                                                                                                                  Tamil Cooking Recipe for kalkandu Rice
                                                                                                                                                  தேவையான பொருட்கள்

                                                                                                                                                  1. அரிசி - 1 கப்
                                                                                                                                                  2. கல்கண்டு - 1 கப்
                                                                                                                                                  3. பால் - 1 1 /2 கப்
                                                                                                                                                  4. தண்ணீர் - 2
                                                                                                                                                  5. நெய் - 2 மேஜைகரண்டி 
                                                                                                                                                  6. முந்திரிப்பருப்பு - 10
                                                                                                                                                  7. ஜாதிக்காய்ப் பொடி - 1 சிட்டிகை  
                                                                                                                                                  செய்முறை

                                                                                                                                                  • குக்கர் இல் பால் தண்ணீர்,  அரிசி சேர்த்து  நன்றாக குழைய வேகவிடவும்  வெந்தபிறகு கல்கண்டினை பொடித்துப் போடவும்.
                                                                                                                                                    • கல்கண்டு  நன்கு கரைந்த பின்  நெய்யில் முந்திரிப்பருப்பினை சிவக்க வறுத்துப் போடவும்.
                                                                                                                                                      •  ஜாதிக்காயை பொடித்துப் போடவும்.
                                                                                                                                                        • நன்றாக கலந்து பரிமாறவும் 

                                                                                                                                                        சிக்கன் ப்ரைடு ரைஸ்

                                                                                                                                                        Tamil Cooking recipe for Chicken Fried Rice
                                                                                                                                                        தேவையான பொருட்கள் 
                                                                                                                                                        1. பாசுமதி அரிசி - 1 கப்
                                                                                                                                                        2. வெங்காயம் - 1 கப்(மெலிசாக நிட்டமாக வெட்டவும்)
                                                                                                                                                        3. எலும்பு இல்லாத கோழி- 1/2கப்
                                                                                                                                                        4. காரட் - 1 (பொடியாக வெட்டவும் )
                                                                                                                                                        5. பீன்ஸ் - ௧௦ (பொடியாக வெட்டவும் )
                                                                                                                                                        6. பச்சை பட்டாணி - 1 /2 கப் (வேகவைத்து எடுத்து கொள்ளவும் )
                                                                                                                                                        7. வெங்காய தாள்  - 1 (பொடியாக வெட்டவும் )
                                                                                                                                                        8. குடைமிளகாய் - 2 (மெலிசாக நிட்டமாக வெட்டவும்)
                                                                                                                                                        9. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைகரண்டி
                                                                                                                                                        10. முட்டை -3
                                                                                                                                                        11. சில்லி சாஸ் - 1 மேஜைகரண்டி
                                                                                                                                                        12. சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
                                                                                                                                                        13. மிளகு தூள்-1 மேசைக்கரண்டி
                                                                                                                                                        14. நெய் - 1/4 கப் 
                                                                                                                                                        15. உப்பு - தேவையான அளவு 
                                                                                                                                                        செய்முறை  
                                                                                                                                                        • சாதம் உதிர் உதிரக  வடித்து  ஆற வைத்து கொள்ளவும் 
                                                                                                                                                        • கோழி  கழுவிச் சுத்தம் செய்து கொண்டு,      உப்பு சேர்த்து தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
                                                                                                                                                        • ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
                                                                                                                                                        • வெங்காயத்தாளையும் வதக்கிக் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.
                                                                                                                                                        •  அதன் பின் காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
                                                                                                                                                        • பின் முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கிண்டவும் 
                                                                                                                                                        • கோழி துண்டுகளை சேர்த்து நன்றாக  வதக்கவும் 
                                                                                                                                                        • அதில் உப்பு,  சோயா சாஸ், சில்லி சாஸ் ,மிளகுதூள்,, சேர்த்து நன்றாக வதக்கவும் மூடி வைத்து வேகவைக்கவும்  
                                                                                                                                                        • காய்கறி நன்றாக வெந்தபின் ஆற வைத்த சாதம் சேர்த்து கிண்டவும் 
                                                                                                                                                        • நன்றாக கிண்டி இறக்கவும் 

                                                                                                                                                        முட்டை ப்ரைடு ரைஸ்

                                                                                                                                                        Tamil Cooking recipe for Egg Fried Rice

                                                                                                                                                        தேவையான பொருட்கள் 
                                                                                                                                                        1. பாசுமதி அரிசி - 1 கப்
                                                                                                                                                        2. வெங்காயம் - 1 கப்(மெலிசாக நிட்டமாக வெட்டவும்)
                                                                                                                                                        3. காரட் - 1 (பொடியாக வெட்டவும் )
                                                                                                                                                        4. பீன்ஸ் - ௧௦ (பொடியாக வெட்டவும் )
                                                                                                                                                        5. பச்சை பட்டாணி - 1 /2 கப் (வேகவைத்து எடுத்து கொள்ளவும் )
                                                                                                                                                        6. வெங்காய தாள்  - 1 (பொடியாக வெட்டவும் )
                                                                                                                                                        7. குடைமிளகாய் - 2 (மெலிசாக நிட்டமாக வெட்டவும்)
                                                                                                                                                        8. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைகரண்டி
                                                                                                                                                        9. முட்டை -3
                                                                                                                                                        10. சில்லி சாஸ் - 1 மேஜைகரண்டி
                                                                                                                                                        11. சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
                                                                                                                                                        12. மிளகு தூள் -1 மேஜைகரண்டி
                                                                                                                                                        13. நெய் - 1/4 கப் 
                                                                                                                                                        14. உப்பு - தேவையான அளவு 
                                                                                                                                                        செய்முறை 
                                                                                                                                                        • சாதம் உதிர் உதிரக  வடித்து  ஆற வைத்து கொள்ளவும் 
                                                                                                                                                        • ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
                                                                                                                                                        • வெங்காயத்தாளையும் வதக்கிக் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.
                                                                                                                                                        •  அதன் பின் காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
                                                                                                                                                        • பின் முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கிண்டவும் 
                                                                                                                                                        • அதில் உப்பு,  சோயா சாஸ், சில்லி சாஸ்,மிளகு தூள்  சேர்த்து நன்றாக வதக்கவும் மூடி வைத்து வேகவைக்கவும்  
                                                                                                                                                        • காய்கறி நன்றாக வெந்தபின் ஆற வைத்த சாதம் சேர்த்து கிண்டவும் 
                                                                                                                                                        • நன்றாக கிண்டி இறக்கவும் 

                                                                                                                                                        எள்ளு சாதம்

                                                                                                                                                        Tamil Cooking recipe for Sesame Rice
                                                                                                                                                        தேவையான பொருட்கள் 
                                                                                                                                                        1. வெள்ளை எள்ளு - 1 /2 கப்
                                                                                                                                                        2. காய்ந்த மிளகாய் - 5
                                                                                                                                                        3. பூண்டு -5
                                                                                                                                                        4.  உளுத்தம் பருப்பு - 1 மேஜைகரண்டி 
                                                                                                                                                        5. பெருங்காயம் - 1 சிட்டிகை 
                                                                                                                                                        6. உப்பு - தேவையான அளவு 
                                                                                                                                                        7. சாதம் - 1 கப் 
                                                                                                                                                        செய்முறை 
                                                                                                                                                        • வாணலியில் எண்ணெய் சேர்க்காமல்  எள்ளை போட்டு  பொன்னிறமாகும் வரை வறுக்கவும். 
                                                                                                                                                        • வாணலியில் ஒரு மேஜைகரண்டி எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை போட்டு பொரிக்கவும். பிறகு அதில் உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய்  போட்டு வறுக்கவும்..
                                                                                                                                                        • ஆறியதும் மிக்ஸியில் எள்ளை தவிர மற்ற அனைத்தும் போட்டு அரைத்து கொள்ளவும் 
                                                                                                                                                        •  பிறகு  வறுத்த எள்ளை போட்டு மீண்டும் பொடி செய்து கொள்ளவும்.
                                                                                                                                                        •  சாதத்தை போட்டு எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும் பிறகு எள்ளு பொடியை தூவி சாதம் முழுவதும்  கலந்து பரிமாறவும்.
                                                                                                                                                        • சுவையான எள்ளு சாதம் தயார்.

                                                                                                                                                        கேரட் சாதம்

                                                                                                                                                        Tamil Cooking recipe for Carrot Rice

                                                                                                                                                        தேவையான பொருட்கள்

                                                                                                                                                          1. சாதம் - 1 கப் 
                                                                                                                                                          2.  கேரட் துருவல்  - 2
                                                                                                                                                          3.  வெங்காயம் - 1
                                                                                                                                                          4. பச்சைமிளகாய் - 2 
                                                                                                                                                          5. எண்ணெய் - 3 ஸ்பூன்
                                                                                                                                                          6. கடுகு - 1/2 ஸ்பூன்
                                                                                                                                                          7. கறிவேப்பிலை - சிறிதளவு
                                                                                                                                                          செய்முறை 
                                                                                                                                                          • எண்ணெய் காயவைத்து அதில் கடுகு,  கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய  வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
                                                                                                                                                          • பின் கேரட்டை கொட்டி பச்ச மிளகாய் உப்பு சேர்த்து கிண்டி முடி வேகவைத்து 
                                                                                                                                                          • பின் அதனுடன் சாதத்தை கலந்து பரிமாறவும்.

                                                                                                                                                              புலாவ்

                                                                                                                                                              Tamil Cooking recipe for Pulao

                                                                                                                                                              தேவையான பொருட்கள்

                                                                                                                                                              1. பட்டை - 2
                                                                                                                                                              2. கிராம்பு - 2
                                                                                                                                                              3. ஏலக்காய் - 2
                                                                                                                                                              4. வெங்காயம் - 2
                                                                                                                                                              5. இஞ்சி பூண்டு விழுது - 1மேஜைகரண்டி
                                                                                                                                                              6. பச்சை மிளகாய் - 4
                                                                                                                                                              7. புதினா - 10 
                                                                                                                                                              8. கொத்தமல்லி - கொஞ்சம் 
                                                                                                                                                              9. கெட்டியான தயிர் - 1 மேஜைகரண்டி
                                                                                                                                                              10. நெய் - 2 மேஜைகரண்டி 
                                                                                                                                                              11. எண்ணெய் - 2 மேஜைகரண்டி 
                                                                                                                                                              12. உப்பு - தேவையான அளவு
                                                                                                                                                              13. பாசுமதி அரிசி - 1 கப்
                                                                                                                                                              14. தேங்காய் பால் - 1 கப்
                                                                                                                                                              15. தண்ணீர் - 1 /2 cup 
                                                                                                                                                                                          செய்முறை 
                                                                                                                                                                                          • குக்கர்ல்   நெய்,  எண்ணெய் விட்டு அதில்   பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயம் பச்சைமிளகாய்   சேர்த்து  பொன்னிறமாக  வதக்கவும்.
                                                                                                                                                                                          • பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் 
                                                                                                                                                                                          • புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் அதில் தயிர் சேர்த்து வதக்கவும் 
                                                                                                                                                                                          • பின் அதில் உப்பு தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து அரிசி சேர்த்து  குக்கர் மூடி வெயிட் போட்டு 10 நிமிடம் குறைந்த தியில் வைத்து இறக்கவும் 
                                                                                                                                                                                          • சுவையான புலாவ் ரெடி 

                                                                                                                                                                                          ப்ரைடு ரைஸ்

                                                                                                                                                                                          Tamil Cooking recipe for Fried Rice

                                                                                                                                                                                          தேவையான பொருட்கள் 
                                                                                                                                                                                          1. பாசுமதி அரிசி - 1 கப்
                                                                                                                                                                                          2. வெங்காயம் - 1 கப்(மெலிசாக நிட்டமாக வெட்டவும்)
                                                                                                                                                                                          3. காரட் - 1 (பொடியாக வெட்டவும் )
                                                                                                                                                                                          4. பீன்ஸ் - ௧௦ (பொடியாக வெட்டவும் )
                                                                                                                                                                                          5. பச்சை பட்டாணி - 1 /2 கப் (வேகவைத்து எடுத்து கொள்ளவும் )
                                                                                                                                                                                          6. வெங்காய தாள்  - 1 (பொடியாக வெட்டவும் )
                                                                                                                                                                                          7. குடைமிளகாய் - 2 (மெலிசாக நிட்டமாக வெட்டவும்)
                                                                                                                                                                                          8. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைகரண்டி
                                                                                                                                                                                          9. சில்லி சாஸ் - 1 மேஜைகரண்டி
                                                                                                                                                                                          10. சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
                                                                                                                                                                                          11. மிளகு தூள் -1 மேசைக்கரண்டி
                                                                                                                                                                                          12. நெய் - 1/4 கப் 
                                                                                                                                                                                          13. உப்பு - தேவையான அளவு 
                                                                                                                                                                                          செய்முறை 
                                                                                                                                                                                          • சாதம் உதிர் உதிரக  வடித்து  ஆற வைத்து கொள்ளவும் 
                                                                                                                                                                                          • ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
                                                                                                                                                                                          • வெங்காயத்தாளையும் வதக்கிக் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும். அதன் பின் காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
                                                                                                                                                                                          • அதில் உப்பு,  சோயா சாஸ், சில்லி சாஸ்,மிளகு தூள்  சேர்த்து நன்றாக வதக்கவும் மூடி வைத்து வேகவைக்கவும்  
                                                                                                                                                                                          • காய்கறி நன்றாக வெந்தபின் ஆற வைத்த சாதம் சேர்த்து கிண்டவும் 
                                                                                                                                                                                          • நன்றாக கிண்டி இறக்கவும் 

                                                                                                                                                                                          தக்காளி சட்னி

                                                                                                                                                                                          Tamil Cooking recipe for Tomato Chutney

                                                                                                                                                                                          தேவையான பொருட்கள்

                                                                                                                                                                                          1. தக்காளி - 4
                                                                                                                                                                                          2. புளி - 1 கொட்டை பாக்கு அளவு 
                                                                                                                                                                                          3. மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
                                                                                                                                                                                          4. உப்பு-தேவையான அளவு 
                                                                                                                                                                                          5. எண்ணெய் -தேவையான அளவு 
                                                                                                                                                                                          தாளிக்க:
                                                                                                                                                                                          1. கடுகு - 1 டீஸ்பூன்
                                                                                                                                                                                          2. உளுத்தம்பருப்பு - 1  டீஸ்பூன்
                                                                                                                                                                                          3. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை 
                                                                                                                                                                                          செய்முறை :
                                                                                                                                                                                          • தக்காளி,மிளகாய்த்தூள்,புளி ,உப்பு ,அனைத்தும் நன்றாக அரைக்கவும்.
                                                                                                                                                                                          • சட்டியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு,உளுத்தம் பருப்பு ,பெருங்காயம் , சேர்த்து  தாளித்து  அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
                                                                                                                                                                                          • எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கிவிடவும் .

                                                                                                                                                                                          பீர்க்கங்காய் சட்னி


                                                                                                                                                                                          Tamil Cooking recipe for Peerkangai Chutney

                                                                                                                                                                                          தேவையான பொருட்கள் 

                                                                                                                                                                                          1. பீர்க்கங்காய் - 2
                                                                                                                                                                                          2. தக்காளி -4
                                                                                                                                                                                          3. வெங்காயம்-1
                                                                                                                                                                                          4. உப்பு -தேவையான அளவு 
                                                                                                                                                                                          5. பெருங்காய தூள் -1 சிட்டிகை 
                                                                                                                                                                                          6. மிளகாய் தூள் -2 மேஜை கரண்டி
                                                                                                                                                                                          தாளிக்க:
                                                                                                                                                                                          1. கடுகு - 1 மேஜை கரண்டி
                                                                                                                                                                                          2. உளுத்தம் பருப்பு -1 மேஜை கரண்டி
                                                                                                                                                                                          3. கறிவபில்லை- 6
                                                                                                                                                                                          செய்முறை 
                                                                                                                                                                                          • குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பீர்க்கங்காய், தக்காளி வதக்கவும் 
                                                                                                                                                                                          • பின் அதில் மிளகாய் தூள் ,உப்பு, பெருங்காய தூள் , தண்ணீர் சேர்த்து குக்கர் மூடி வெயிட் போட்டு  1 சத்தம் 5 நிமிடம் சிறு தியில் வைத்து நிறுத்தவும் 
                                                                                                                                                                                          • பின் குக்கரை திறந்து கடைந்து  விட்டு  கொதிக்கவைக்கவும் 
                                                                                                                                                                                          • சட்டியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை சேர்த்து  தாளித்து அதில் சேர்க்கவும்

                                                                                                                                                                                          புதினா சட்னி


                                                                                                                                                                                          Tamil Cooking recipe for Mint Chutney 

                                                                                                                                                                                          தேவையான பொருட்கள் 
                                                                                                                                                                                          1. புதினா - 10
                                                                                                                                                                                          2. தேங்காய் - 1 கப் 
                                                                                                                                                                                          3. பச்சை மிளகாய் -3
                                                                                                                                                                                          4. புளி-1 மேஜைகரண்டி 
                                                                                                                                                                                          5. உப்பு -தேவையான அளவு 
                                                                                                                                                                                          செய்முறை 
                                                                                                                                                                                          • முதலில் புதினா இலையை மற்றும் எல்லா பொருள்களையும் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
                                                                                                                                                                                          • வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து அரைத்து விழுதுடன் சேர்த்து கலக்கவும்.
                                                                                                                                                                                          • தோசை இட்லிக்கு நன்றாக இருக்கும் 
                                                                                                                                                                                          •  

                                                                                                                                                                                          கறிவேப்பில்லை சட்னி


                                                                                                                                                                                          Tamil Cooking recipe for Curry Leaf Chutney 

                                                                                                                                                                                          தேவையான பொருட்கள் 
                                                                                                                                                                                          1. கறிவேப்பில்லை-10
                                                                                                                                                                                          2. சின்ன வெங்காயம் -10
                                                                                                                                                                                          3. தக்காளி-2
                                                                                                                                                                                          4. கடுகு - 1 மேஜைகரண்டி 
                                                                                                                                                                                          5. உளுத்தம் பருப்பு -1 மேஜைகரண்டி
                                                                                                                                                                                          6. கடலை பருப்பு -1 மேஜைகரண்டி
                                                                                                                                                                                          7. சிகப்பு மிளகாய் -3
                                                                                                                                                                                          8. உப்பு -தேவையான அளவு 
                                                                                                                                                                                          செய்முறை 
                                                                                                                                                                                          • வாணலியில்  எண்ணெய் ஊற்றி கடுகு,   உளுத்தம்பருப்பு கடலைபருப்பு சேர்த்து பொரித்து மிளகாய் சேர்த்து வறுத்து கொள்ளவும் 
                                                                                                                                                                                          • பின் அதில் சின்ன வெங்காயம் வதக்கி தக்காளி  கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும் 
                                                                                                                                                                                          • அனைத்தும் வதக்கி ஆறவைத்து உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும் 
                                                                                                                                                                                          • தோசைக்கு ருசியாக இருக்கும் 



                                                                                                                                                                                          வேர்க்கடலை சட்னி

                                                                                                                                                                                          Tamil Cooking recipe for Peanut Chutney 

                                                                                                                                                                                          தேவையான பொருட்கள் 

                                                                                                                                                                                          1. வறுத்த வேர்க்கடலை -1கப்
                                                                                                                                                                                          2. தேங்காய்துருவல் -4 மேஜைகரண்டி
                                                                                                                                                                                          3. பொட்டுக்கடலை -1ஸ்பூன் 
                                                                                                                                                                                          4. காய்ந்தமிளகாய் -3
                                                                                                                                                                                          5. பூண்டு -2
                                                                                                                                                                                          6. புளி - 1 சிட்டிகை 
                                                                                                                                                                                          7. உப்பு -தேவையான அளவு
                                                                                                                                                                                          செய்முறை 
                                                                                                                                                                                          • அனைத்தும் ஒன்றாக சேர்த்து போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
                                                                                                                                                                                          • தோசைக்கு நன்றாக இருக்கும் 

                                                                                                                                                                                          உருளை கிழங்கு கறி


                                                                                                                                                                                          Tamil Cooking recipe for Potato Kari 

                                                                                                                                                                                          தேவையான பொருட்கள் 
                                                                                                                                                                                          1. உருளை கிழங்கு -1
                                                                                                                                                                                          2. வெங்காயம் -1
                                                                                                                                                                                          3. தேங்காய் பால் - 1 கப் 
                                                                                                                                                                                          4. சாம்பார் தூள் -2 மேஜைகரண்டி 
                                                                                                                                                                                          5. கரம் மசாலா -1  மேஜைகரண்டி
                                                                                                                                                                                          6. உப்பு -தேவையான அளவு 
                                                                                                                                                                                          செய்முறை 
                                                                                                                                                                                          • உருளைகிழங்கு வேகவைத்து எடுத்துதுண்டு போட்டு கொள்ளவும் 
                                                                                                                                                                                          • வாணலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி தேங்காய் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் 
                                                                                                                                                                                          • பிறகு சாம்பார் தூள் கரம் மசாலா தூள் வேகவைத்த உருளை சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து திக்காக வந்தவுடன் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கவும் 
                                                                                                                                                                                          • இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும் 
                                                                                                                                                                                           

                                                                                                                                                                                          சாம்பார்(Idly)

                                                                                                                                                                                          Tamil Cooking recipe for Idly Sambar



                                                                                                                                                                                          தேவையான பொருட்கள் 
                                                                                                                                                                                          1. துவரம் பருப்பு - 1 கப் 
                                                                                                                                                                                          2. மஞ்சள் தூள்- 1 சிட்டிகை 
                                                                                                                                                                                          3. பெருங்காய தூள் - 1 சிட்டிகை 
                                                                                                                                                                                          4. எண்ணெய் -  1 சிட்டிகை  
                                                                                                                                                                                          5. சின்ன வெங்காயம் -15
                                                                                                                                                                                          6. தக்காளி -1
                                                                                                                                                                                          7. காரட் -1
                                                                                                                                                                                          8. உருளை கிழங்கு-1 
                                                                                                                                                                                          9. பச்சை மிளகாய் -4
                                                                                                                                                                                          10. சாம்பார் தூள் - 1 மேஜைகரண்டி 
                                                                                                                                                                                          11. உப்பு - தேவையான அளவு 
                                                                                                                                                                                          தாளிக்க 
                                                                                                                                                                                          1. கடுகு- 1 ஸ்பூன்  
                                                                                                                                                                                          2. வெந்தயம்-1 /2 ஸ்பூன்  
                                                                                                                                                                                          3. பெருங்காய தூள்- 1 சிட்டிகை  
                                                                                                                                                                                          4. சிகப்பு மிளகாய் -1
                                                                                                                                                                                          5. கறிவபில்லை -6

                                                                                                                                                                                          செய்முறை 


                                                                                                                                                                                          • முதலில் துவரம் பருப்பினை மஞ்சள்தூள் பெருங்காயதூள் 1 ஸ்பூன் எண்ணெய் தண்ணீர் சேர்த்து  குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.
                                                                                                                                                                                          • பின்னர் வெங்காயம்,  பச்சை மிளகாய் மற்றும் தக்காளி  போட்டு வதக்கவும்.
                                                                                                                                                                                          • காய்கறி சேர்த்து வதக்கவும் 
                                                                                                                                                                                          • அதன் பின் சாம்பார்தூள்  உப்பு மற்றும் வேக வைத்துள்ள துவரம் பருப்பினை  தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
                                                                                                                                                                                          • சட்டியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு,வெந்தயம்  பெருங்காயதூள் ,சிகப்பு மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து  தாளித்து அதில் சேர்க்கவும்
                                                                                                                                                                                          • கொதி வந்தவுடன்    கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
                                                                                                                                                                                          Related Posts with Thumbnails