தேவையான பொருட்கள்
- தோசை மாவு- 1 கப்
- உருளைக்கிழங்கு - 4
- வெங்காயம் - 2(நீட்டமாக வெட்டவும் )
- பச்சை மிளகாய் - 4
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
- கடுகு - 2 டீஸ்பூன்
- இஞ்சி -1 துண்டு
- உளுத்தம் பருப்பு -2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசித்து வைத்து கொள்ள வேண்டும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பையும் கறிவேப்பிலை போட்டு பொரிக்க வேண்டும்
- பிறகு வெங்காயம், சேர்த்து வதக்கி இஞ்சி , பச்சை மிளகாயை இரண்டாக கீறி போட்டு அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியவுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு கிண்ட வேண்டும்
- பிறகு தோசை மாவை கல்லில் ஊற்றி, எண்ணெய் ஊற்றி, செய்து வைத்துள்ள மசாலாவை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நடுவில் வைத்து தோசையை மூடி எடுக்கவும்