எள்ளு சாதம்

Tamil Cooking recipe for Sesame Rice
தேவையான பொருட்கள் 
 1. வெள்ளை எள்ளு - 1 /2 கப்
 2. காய்ந்த மிளகாய் - 5
 3. பூண்டு -5
 4.  உளுத்தம் பருப்பு - 1 மேஜைகரண்டி 
 5. பெருங்காயம் - 1 சிட்டிகை 
 6. உப்பு - தேவையான அளவு 
 7. சாதம் - 1 கப் 
செய்முறை 
 • வாணலியில் எண்ணெய் சேர்க்காமல்  எள்ளை போட்டு  பொன்னிறமாகும் வரை வறுக்கவும். 
 • வாணலியில் ஒரு மேஜைகரண்டி எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை போட்டு பொரிக்கவும். பிறகு அதில் உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய்  போட்டு வறுக்கவும்..
 • ஆறியதும் மிக்ஸியில் எள்ளை தவிர மற்ற அனைத்தும் போட்டு அரைத்து கொள்ளவும் 
 •  பிறகு  வறுத்த எள்ளை போட்டு மீண்டும் பொடி செய்து கொள்ளவும்.
 •  சாதத்தை போட்டு எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும் பிறகு எள்ளு பொடியை தூவி சாதம் முழுவதும்  கலந்து பரிமாறவும்.
 • சுவையான எள்ளு சாதம் தயார்.
Related Posts with Thumbnails