கடப்பா


Tamil Cooking recipe for Kadapa

தேவையான பொருட்கள் 
 1. பாசிபருப்பு -1 கப் 
 2.  நறுக்கிய உருளைகிழங்கு -1 /2
 3.  நறுக்கிய கராட் -1 /2
 4. தோலுடன் பூண்டு-5
அரைக்க :
 1. பச்சை மிளகாய் -4
 2. இஞ்சி -2 இன்ச் 
 3. சோம்பு -1  மேஜை கரண்டி
 4. தேங்காய் துருவல் -4  மேஜை கரண்டி
தாளிக்க:
 1. கரம் மசாலா - 1 மேஜை கரண்டி 
 2. பொடியாக நறுக்கிய வெங்காயம்-1 /2
 3. கறிவேப்பில்லை -6
செய்முறை 
 • வாணலியில் பாசிபருப்பு உடன் உருளை கிழங்கு , காரட் , போட்டு  தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும் .
 • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து  கொள்ளவும்
 • தனியாக தோலுடன் பூண்டு  தட்டி வைத்து கொள்ளவும் 
 • வாணலியில்  எண்ணெய் ஊற்றி கரம் மசாலா , வெங்காயம் , கறிவேப்பில்லை தாளித்து அரைத்த தேங்காய் வில்லுதினை  சேர்த்து வதக்கவும்
 • பின்  பாசிபருப்பு காய்கறி கலவை  சேர்த்து நன்கு கொதிக்க விடவும் 
 • பின் தட்டி வைத்த பூண்டு  கொத்தமல்லி தூவி கொதித்த பின் இறக்கவும் 
 • இறக்கி எலுமிச்சம் பழம் பிழியவும் 
 • இட்லி தோசைக்கு  சுவையாக இருக்கும் 

Related Posts with Thumbnails