பரோட்டா

Tamil Cooking recipe for Parotta
தேவையான பொருட்கள்
 1. மைதா மாவு - 1 கிலோ
 2. முட்டை - 5
 3. பால் - 2 கப்
 4. தண்ணீர் - 2 கப் 
 5. பேக்கிங் பவுடர் -4 மேஜைகரண்டி
 6. நெய் - 5 மேஜைகரண்டி
 7. எண்ணெய் -1 /2 கப்
 8. சக்கரை - 5 மேஜைகரண்டி
 9. உப்பு - தேவையான அளவு 
செய்முறை 
 • முட்டை உடைத்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும் 
 •  ஒரு பாத்திரத்தில் மைதா சேர்த்து அதில் பால் சக்கரை, உப்பு பேக் கிங் பவுடர் அடித்த முட்டை தண்ணீர் சேர்த்து மாவில் கலந்து பிசையவும்
 • பிசைந்த மாவு கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும் 
 • மாவை நன்கு ஈரத்துணியால் முடி 1 மணி நேரம் ஊறவைகவும் 
 • பிறகு மாவை எடுத்து சிறு உருண்டை செய்து நெய் எண்ணெய் தடவி நன்றாக உருட்டி 3 மணி நேரம் ஈரத்துணியால் ஊறவைகவும்
 • பின் அதை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் மெலிதாக தேய்த்து அதில் எண்ணெய் தடவி விசுறி மடிப்பது போல் முன்னும் பின்னும் மடித்து சுருட்டி வைக்கவும் 
 • பின்சுருட்டிய உருண்டையை சப்பாத்தி கட்டையால் தேய்த்து தோசைகல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சிவந்ததும் திருப்பி  போட்டு எடுக்கவும் 
மேலும்: சில்லி பரோட்டாமுட்டை கொத்து பரோட்டா
Related Posts with Thumbnails