தேவையான பொருட்கள்
- ரவை - 1 கப்
- ஆப்பிள் - 1 /2 கப்
- அன்னாசி - 1 /2 கப்
- மாம்பழம் - 1 /2 cup
- திராட்சை - 100 கிராம்
- சர்க்கரை - இரண்டரை கப்
- நெய் - 1 /2 கப்
- முந்திரி - 1 /4 கப்
- உப்பு -1 சிட்டிகை
- ஏலக்காய் - 2 சிட்டிகை
செய்முறை
- முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
- கடாயில் முன்று மேஜை கரண்டி நெய் ஊற்றி ரவையை சிறு தியில் வைத்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்
- ஆப்பிள், அன்னாசி, திராட்சை மாம்பழதோல் சிவி சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்
- ஆப்பிள், அன்னாசி, திராட்சை மாம்பழம துண்டுகளை சக்கரையில் சேர்த்து 1 மணி நேரம் உறவிடவும்
- பால் மற்றும் தண்ணீரை, கலர் உடன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
- தண்ணீர் நன்றாக கொதிவரும் போது, ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்.
- ரவை முக்கால் பாகம் நன்றாக வெந்த பிறகு உப்பு சக்கரை மற்றும் பழங்களை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கிளறி விடவும்.
- பின் வருத்த முந்திரி சேர்த்து கிளறவும்
- சுவையான ப்ரூட் கேசரி ரெடி.
மேலும்: ரவை கேசரி, கோதுமை கேசரி, நட்ஸ் கேசரி, அரிசி கேசரி, மாம்பழ கேசரி, பைனாப்பிள் கேசரி, அவல் கேசரி, சேமியா கேசரி, ரவா கேசரி (மைக்ரோவேவ் முறை)