தேவையான பொருட்கள்
- கோதுமை ரவை - 1 கப்
- சீனி - 1 கப்
- முந்திரி பருப்பு - 6
- பாதாம் பருப்பு - 6
- கிஸ்மிஸ் பழம் -6
- நெய் - 4 தேக்கரண்டி
- ஏலக்காய் பொடி- 2 சிட்டிகை
- பால் - 1 1 /2கப்
- சூடான தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை
- முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி பாதாம் வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
- கடாயில் முன்று மேஜை கரண்டி நெய் ஊற்றி கோதுமை ரவை சிறு தியில் வைத்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்
- பால் மற்றும் தண்ணீரை சேர்த்து கொதிக்கவைக்கவும்
- தண்ணீர் நன்றாக கொதிவரும்போது, கோதுமை ரவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்
- மேலே 3 தேக்கரண்டி நெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்திருக்கவும்
- கோதுமைரவை கலவை நன்றாக வெந்ததும் சக்கரை உப்பு ஏலக்காய்தூள் போட்டு விடவும்
- வறுத்து வைத்திருக்கும் முந்திரி பாதாம் கிஸ்மிஸ் பழம் கேசரியில் போட்டு கிளறி விடவும்.