- சேமியா - 1 கப்
- சக்கரை - 3/4 கப்
- தண்ணீர் - 1 கப்
- பால் - 1 கப்
- கேசரி கலர் - 1 சிட்டிகை
- ஏலக்காய் பவுடர் - 2 சிட்டிகை
- நெய் - 6 மேஜை கரண்டி
- முந்திரி - 15
- உப்பு - 1 சிட்டிகை
செய்முறை :
- வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி சேமியா போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
- வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
- அதே வாணலியில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி அதில் கலர் பவுடரை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போது ஏலக்காய் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.
- தண்ணீர் கொதித்ததும் வருத்த சேமியா கொட்டி கொண்டே கிளறி விடவும். கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- சேமியா வெந்த பிறகு சீனியை சேர்த்து கிளறி விடவும். அதில் வறுத்த முந்திரியை போட்டு மூன்று மேசைக்கரண்டி நெய் ஊற்றி ஐந்து நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்
- கெட்டியான பதம் வந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கவும். தேவைப்பட்டால் மேலும் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.