தேவையான பொருட்கள்
- ரவை - 1 கப்
- சீனி - 3 /4 கப்
- மில்க் மெய்டு - 5 மேசைக்கரண்டி
- கேசரி கலர் - 2 சிட்டிகை
- பாதாம் - 5
- பிஸ்தா - 5
- முந்திரி - 5
- நெய் - 5 மேசைக்கரண்டி
- பால் - 3 /4 கப்
- தண்ணீர் -1 cup
- முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
- கடாயில் முன்று மேஜை கரண்டி நெய் ஊற்றி ரவையை சிறு தியில் வைத்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்
- பாதாம்,, பிஸ்தாவை தோல் நீக்கி,முந்திரியுடன் சேர்த்து 3 மேசைக்கரண்டி பால் ஊற்றி மிக்ஸியில் மை போல் அரைத்துக்கொள்ளவும்.
- பின் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும் ,கொதிக்கும் பொது கேசரி கலர் மற்றும் ரவை சேர்த்து வேகவிடவும்
- வெந்ததும் சக்கரை சேர்த்து கிளறவும்.
- பின் அரைத்த கலவையை ஊற்றி கிளறவும்.
- பின் மில்க் மெய்டு ஊற்றி கிளறவும்.மில்க் மெய்டு, முந்திரி கலவையை ஊற்றியபின் அடி பிடிக்க ஆரம்பிக்கும் அதனால் கைவிடாமல் கிளறவும்.பின் நெய் ஊற்றி கிறவும்.
- நன்கு கேசரி பதம் வந்ததும் இறக்கிவிடவும்.