தேவையான பொருட்கள்
- சம்பா கோதுமை - 250 கிராம்
- சீனி - 750 கிராம்
- நெய் - 250 கிராம்
- முந்திரிப்பருப்பு - 50 கிராம்
- ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
- எலுமிச்சை - அரை மூடி
- உப்பு - 1 சிட்டிகை
- கோதுமையை முந்தினம் இரவே ஊறவைத்து மறுநாள் காலை ஆட்டி பிழிந்து பால் எடுத்து தனியே வைத்துவிடவும்.
- முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
- பிறகு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து கோதுமை பாலில் சீனியைக் கொட்டி, கலர்பொடி சேர்த்து அடிப்பிடிக்காமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.
- ஒட்டும்பொழுது சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
- அல்வா பதம் வரும்போது நெய் கக்க ஆரம்பிக்கும். அப்போது சிறிது எலுமிச்சம்பழம் பிழிந்து, ஏலப்பொடி உப்பு கலந்து, வருத்த முந்திரி சேர்க்கவும்
- நெய் கக்கின பிறகு சுமார் அரை மணி நேரம் வரை கிண்டி இறக்கவும்.