தேவையான பொருட்கள்
- பீட்ரூட் - 1/2 கிலோ
- சீனி - 300 கிராம்
- நெய் - 50 கிராம்
- பால் - 1 /2 லிட்டர்
- திராட்சை - 5
- முந்திரி - 10
செய்முறை
- பீட்ரூட் தோலை சீவி நன்றாக துருவிக் கொள்ளவேண்டும்.
- பின் காடியில் துருவிய பீட்ரூட் சேர்த்து தண்ணீர் போக நன்றாக வதக்கவும்.
- அதன்பின் பாலை ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்.
- பீட்ரூட் நன்றாக வெந்தவுடன் அதில் சக்கரை போட்டு கிளறி விடவேண்டும். சீனி நன்றாக கரைந்தவுடன் இதில் நெய், போட்டு கிளற வேண்டும்.
- அல்வா பதம் வந்தவுடன் வருத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.