தேவையான பொருட்கள்
- பாதாம் பருப்பு - 1 1/2 கப்
- சர்க்கரை - 3 கப்
- நெய் - 3 /4 கிராம்
- பால் - 1 /4 கப்
- குங்குமப்பூ - 1 கிராம்
- மஞ்சள் கலர் - ஒரு சிட்டிகை
- பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து, அவற்றின் தோல் உரித்து நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.
- அலசிய பாதாம் பருப்புகளை பால் விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து பாதாம் பருப்பு விழுது, சர்க்கரையைப் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
- குங்குமப்பூ 1 ஸ்பூன் பாலில் கலந்து வைக்கவும் கலவை பாத்திரத்தில் ஒட்டாதவாறு கிளறவும்.
- பின்பு குங்குமப்பூ போடவேண்டும்
- சிறுது சிறுதாக நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
- நன்றாக சுருண்டு வரும் பொது அடுப்பை ஆப் செய்யவும்.
- பின்பு வாணலியை கீழே இறக்கி, வைக்கவும்
- கலவை பாத்திரத்தில் ஒட்டாதவாறு கிளறவும்.