skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள்
- முற்றிய பூசணிக்காய் - 1
- சர்க்கரை - 1 1/2 கிலோ
- தண்ணீர் - 4 கப்
- நெய் - 6 மேசைக்கரண்டி
- திராட்சை - 8
- முந்திரி - 10
- ஏலப்பொடி - 2 சிட்டிகை
- ஜாதிக்காய் பொடி -2 சிட்டிகை
- கேசரிப்பவுடர் - 1 சிட்டிகை
செய்முறை - பூசணிக்காயை துருவி எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி திராட்சை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
- துருவிய பூசணிக்காயை 4 கப் தண்ணீரில் வேகவைத்து எடுத்து ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி பிழிந்தெடுக்க வேண்டும்.
- வடிகட்டிய பூசணிக்காயை தண்ணீர் எடுக்கவும்.
- கேசரி கலர் சேர்க்கவும்.
- இதனுடன் ஒன்றரை கிலோ சர்க்கரை சேர்த்து அடுப்பில் வேகவைக்க வேண்டும்.
- சர்க்கரை பாகாக உருகி, மொத்தமாக இறுகி வரும் வேளையில் வருத்த முந்திரி சேர்த்து கிளறவும்.
- இறக்குவதற்கு முன்பு, ஏலப்பொடி, ஜாதிக்காய் பொடி போட்டு சேர்த்துக் கிளறிவிடவும்.